Tuesday, May 17, 2011

ஒவ்வொரு பௌர்னமி பொழுதிலும்…….! பாரதி தீட்சண்யா

ஒவ்வொரு பௌர்னமி பொழுதிலும் திருமறைக் கலா மனறத்தினர் கொட்டாஞ்சேனையில் (கொழும்பில்) அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர். கடந்த 17-05-2011 செவ்வாயக் கிழமை அன்று மட்டுவில் ஞாகுமரனின் “சிறகு முளைத்த தீயாக” , மன்னார் அமுதனின் “ அக்ரோனி” ஆகிய கவிதைத் தொகுப்புகளுக்கான விமர்சன நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தது.


இந் நிகழ்விற்கு திரு வதிரி. சி. இரவிந்திரன் தலைமை தாங்கினார். நேரத்தின் விரிவு அஞ்சி மிக சுருக்கமாகவே தமது தலைமையுரையை ஆற்றினார்.

தமது உரையில்:

“இன்று பல புதிய தலைமறையினர் இலக்கியம் படைக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களின் படைப்புகளில் சமுதாய அக்கரையும் சமூகக்கொடுமைகளுக்கு எதிரான தர்மாவேசமும் இழையோடியிருப்பது வரவேற்றகத்தக்கதோர் அம்சமாகும். ஆந்தவகையில் இன்றைய நிகழ்வு இரு இளந்தலைமுறையினரின் இரு கவிதை தொகுப்புகள் பற்றியதாக அமைந்துள்ளமை வரவேற்கதக்கதோர் முயற்சியாகும்.” ஏனக் குறிப்பிட்டார்.

அக்ரோணி கவிதைக் தொகுப்பு பற்றி ஆய்வு செய்த கனிவுமதி படைப்பாளி என்ற தளத்தில் நின்றுக் கொண்டே தனது விமர்சத்தை முன்வைத்தமை சிறப்பானதொரு அம்சமாகும். இந்த நிகழ்வில் கவிதைக் குறித்து அவரது மதிப்பீடு கடந்த காலங்களில் அவர் முன் வைத்திருந்த கருத்துக்களிலிருந்து வளர்ச்சி அடைந்திருப்பதாகவே உணர முடிகின்றது. அவ்வளர்ச்சி சமூகம் சார்ந்த தாக அமைந்திருநதமை வரவேற்கக் தக்கதொன்றாகும்.

அவரது உரையில் இடம்பெற்ற பின்வரும் வரிகள் முக்கியமானவைகளாகும்.

“எதுகை மோனைக்காக கவிதையின் பாடுப் பொருளை தீர்மாணித்து பொருளற்ற கவிதையை எழுதுவதை விட சமுதாய அக்கரையோடு மக்கள் ரசிக்கும் வடிவத்தில் கவிதை படைப்பவனே உண்மையான கவிஞன். மனிதர்கள் அனுபவிக்கும் துன்பத் துயரங்களும் அவலங்களும் போராட்டங்களும் ஒரு உண்மைக் கவிஞனால் வெளிக் கொணரப்படும். அக்ரோணி என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கவிதை மரபு காதல் உணர்ச்சிகளை வெளியிடுகின்ற போதும் இன்றைய சலாசார பண்பாடு- வெகுசன பன்பாட்டுக்கு விரோதமாக இருக்கக் கூடிய வெகுசன தொடர்பு சாகனங்கள், மனித குலத்தை கூறுப்படுத்தும் சாதி, ஊடகவியலாளர்களுக்கு எதிரான படுகொலைகள் என்பனவற்றை இக்கவிதைத் தொகுப்பு கவிநயத்துடன் எடுத்துக் கூறுகின்றது” எனக் குறிப்பிட்டார்.

மட்டுவில் ஞானக்குமரனின் “சிறகு முளைத்த தீயாக” என்ற கவிதைத் தொகுப்பினை விமர்சனம் செய்த மேமன்கவி தமிழ் கவிதை மரபினைச் சுட்டிக் காட்டியதுடன் அதற்குள் ஈழத்துக் கவிதை மரபு எவ்வகையான பொதுமைகளுடனும் தனித்தன்மையுடனும் வளர்ந்து வந்தது என்பதுக் குறித்து பரந்துப்பட்ட கருத்தாடலை மேற்கொண்டிருந்தார். அவர் தமது உரையில்…

“ ஈழத்தின் ஆரம்ப கால கவிதைகள் யாவும் பழந்தமிழ் இலக்கியங்களைத் தழுவி அதன் பாணியில் கவிதை எழுதுவதே வழக்காயிருந்தது. இந்தியாவில் ஏற்பட்ட தேசிய போராட்டமும் அதனையொட்டியெழுந்த பாரதி முதலான கவிஞர்களின் வரவும் ஈழத்து கவிதை மரபில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈழத்து நவீன கவிதை மரபு பாரதியுடன் தான் தொடங்குகின்றது. பாரதியின் தாக்கத்தை நாம் ஈழக் கவிஞர்களான முருகையன், மஹாகவி, சண்முகம் சிவலிங்கம் முதலானோரிடத்தில் காணலாம். அதே சமயம் காலப்போக்கில் ஈழத்து கவிதையில் வானம்பாடிகளின் தாக்கத்தையும் காணக் கூடியதாக உள்ளது. இவ்வணியினர் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் மீண்டும் மீண்டும் கூறியதையே கூறினர். இவ்வம்சம் அவர்களது பலவீனங்களில் ஒன்றாகும். ஈழத்தில் ஏற்பட்ட போர்க்காலச் சூழலும் நெருக்கடிகளும் போர்;க்கால படைப்புகள் என்ற தனித்தன்மை மிக்க இலக்கிய போக்குகளைத் தோற்றவித்துள்ளது. மட்டுவில் ஞானக்குமரனின் கவிதைகளை பொறுத்தமட்டில் வானம்பாடிகளின் தாக்கத்தையும் போர்க்கால படைப்புகளின் தாக்கத்தையும் கொண்டு முகிழ்ந்திருக்கின்றது. காலத்தின் போக்குகளுக்கு ஏற்றவகையிலான உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் தோற்றுவிக்க வேண்டிய பொறுப்ப மானுடத்தை நேசிக்கும் படைப்பாளிகளின் பணியாகும் ” எனக் குறிப்பிட்டார்.

இவ்விரு கவிஞர்களின் கவிதைகளை முழுமையாக நோக்குகின்ற போது மனிதநேய உணர்வு வௌ;வேறு வகையில் இழையோடியிருக்கின்றது. வாழ்வில் எதிர்படும் சோதனைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உளத்திண்மை இவர்களிடம் நிரம்ப உண்டு. இவர்களின் அரசியல் சமுதாயம் சார்ந்த அறிவும் அனுபவமும் வளர்ச்சியடையும் போது இன்னும் கனதியான கவிதைகளை இவர்களிடமிருந்து எதிர் பார்க்கலாம். இவ்விரு கவிஞர்களின் பதிலுரைகளும் மேற்குறித்த நாகரீகத்தை மேலும் முன்nனுடுப்பதாக அமைந்திருந்தமை வரவேற்க்க தக்கதோர் அம்சமாகும். இந்நிகழ்வில் சக்திதரன், லெனின் மதிவானம், கவிஞர் அலரி, செந்தில்குமரன் முதலானோர் கருத்துரை வழங்கினர்.

அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள் பெரும்பாலும் இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பதிலாக பிற்பபோக்கான அரசியல்வாதிகளையும் பணப்பலம் படைத்தோரையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற சமூக விரோதிகளை நியாயப்படுத்துவதாகவும் பாராட்டுவதாகவுமே அமைந்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் எளிமையாக மிக எளிமையாக மக்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டோர் சிலர் ஒன்றுக் கூடி இவ்வகையான இலக்கியங்கள் குறித்து சிந்திப்பது தன்முனைப்பற்ற நாகரீகத்தை எமக்கு எடுத்தக் காட்டுகின்றது.எமது யாசிப்பு இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என்பதாகும்.

3 comments:

 1. நன்றிகள் லெனின்! மக்களிடமும் இளையத் தலைமுறையினரிடமும் நெருக்கம் கொள்வதற்கு இத்தகைய நிகழ்வுகள் நமக்கு பயன் கொண்டதாக இருக்கிறது இல்லையா? இத்தகைய நிகழ்வுகளை பற்றி பரவலாக அறிய செய்வது மூலம், அத்தகைய களங்களில் பரவலாக பல்வேறு கருத்தாடல்கள் மேற்குள்வதற்கு ஊக்கமாக இருக்கும். அந்த வகையில் உங்களின் இப்பதிவு பயன்மிக்கது.

  ReplyDelete
 2. இலக்கியப் பாசறை நிகழ்வினை உடனடிச் செய்தியாக்கியமைக்கு நன்றிகள். உங்களைப் போன்ற தரமான இலக்கியகர்த்தாக்கள் இலக்கியப்பசறையில் கலந்துகொள்வதும், உற்சாகமூட்டும் வகையில் பதிவிடுவதும் வரவேற்கத்தக்கது.

  நன்றிகள்

  ReplyDelete
 3. திருமறைக்கலாமன்றத்தின் முயற்சிகள் வெல்லட்டும்.சேதுபாலம் புராணகாலத்தில் இராமனின் வானரப்படைகளுக்கு அணில்களும் உதவினவாமே.அதுபோல் இருக்கட்டுமே.பணிதொடர வாழ்த்துக்கள் வைகைகரையிலிருந்தும் வருகிறது.

  ReplyDelete