மலையக தியாகி சிவனுலெட்சுமணனின் நினைவுத் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நாட்டார் பாடல் சேகரிப்பு போட்டியொன்றினை நடாத்த முச்சந்தி இலக்கிய வட்டம் தீர்மாணித்துள்ளது.
மலையக மக்களின் வரலாற்று ஆவனமாகவும் சான்றாதாரமாகவும் திகழும் மலையக நாட்டார் பாடல்கள் பழமொழிகள் என்பனவற்றினை சேகரித்து வெளியிடவும் அவை சேகரிப்பு தொடர்பில் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தவும் இம் முயற்சி ஆதர்சனமாக அமையும் என எதிபார்க்கப்படுகின்றது. தெரிவு செய்யப்படும் பாடல், விடுகதை, பழமொழிகள் என்பனவற்றுக்கு எதிர்வரும் சிவனுலெட்சுமணன் நினைவுப்பேருரையின் போது பரிசில்கள் வழங்கப்படும். அத்துடன் தொகுக்கப்படும் நூலில் பாடியவர், தொகுத்தவர் விபரம், பெயர், என்பனவும் பிரசுரிக்கப்படும்.
இதற்கான பரிசில்கள் 2011 மே மாதத்தில் நடைப்பெறவுள்ள சிவனுலெட்சுமணன் நினைவுப் பேருரையின் போது வழங்கப்படும்.
போட்டியில் பங்குபற்றும் மாணவர்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியின் விதியின்படி 10 நாட்டார் பாடல்களுடன் 10 பழமொழிகள் அல்லது விடுகதைகளையும் சேகரித்து அனுப்புதல் வேண்டும். அனுப்பபடும் பாடல்கள் பழமொழிகள், விடுகதைகள் நேரடியாக மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
போட்டியாளர் மாணவர் என்பதை உறுதிப்படுத்த அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்( உத்தியோக முத்திரை இடப்படல் வேண்டும்) யாரேனும் ஒருவரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி: திரு. சு. உலகேஸ்பரா, அமைப்பாளர், முச்சந்தி இலக்கிய வட்டம்,
19 / 10, திம்புல்ல வீதி, ஹட்டன்.
No comments:
Post a Comment