Wednesday, July 24, 2013

வதிரி சி. ரவீந்திரனின் கவிதை விகர்சிப்பு: ஒரு விமர்சனப் பதிகை லெனின் மதிவானம்

இலங்கை கவிஞர்கள் பண்டையகாலம் தொட்டு தமிழ் கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தே வந்துள்ளனர். ஈழத்து ப+தந்தேவனாரிலிருந்து எம்.ஏ நுஃமான் வரையில் தமிழ் கவிதை வளர்ச்சிக்கு பலவேறுவிதங்களில் பங்களிப்பு செய்துள்ளனர். இன்று தமிழ் கவிதையின் வளர்ச்சியை பின்னோக்கி பார்க்கின்ற போது அத்துறை பல மாற்றங்களையும் புதிய போக்குகளையும் தன்னகத்தே கொண்டதாக காணப்படுகின்றது. இந்த மாற்றம்-வளர்ச்சி தற்செயலாக தோனறியதொன்றல்ல. இதுவரைக்காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனை முயற்சிகளின் ஊடாகவே இந்த வளர்ச்சிக் கட்டத்தை எய்துள்ளனர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியின் சமகாலத்தவரான பாவலர் துரையப்பாபிள்ளையே சமூக சிந்தனையை முதன் முதலாக இலங்கை கவிதையில் வெளிப்படுத்தியவர் என்பது ஆய்வாளர்களி;ன் துணிபு. பின் வந்த பரம்பரையினர் கம்பீரமான செய்யுள் நடையிலோ அல்லது பழமையான மொழி நடையின் ஊடாகவே சமூகப் பிரச்சனைகளை தமது கவிதையில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வந்த பரம்பரையினர், பாரதி, பாரதிதாசனின் தாக்கத்திற்குட்பட்ட ஈழத்து கவிஞர்கள் ஆவார். இப்பிரிவினர் மக்களின் வாழ்வை மக்களின் மொழியில் கவிதையாக்கிதர முற்பட்டனர். அறுபதுகளில் புதிய பரம்பரைக் கவிஞர்கள் பலர் அரசியல் பிரக்ஞையோடு கவிதைத் துறையில் தடம் பதித்தமை ஈழத்து கவிதைத் துறைக்கு  மாத்திரம் உரித்தான பண்பல்ல.
இக்காலச் சூழலில்  இலங்கையின் வடப்பகுதியில்; முனைப்புறிருந்த பண்னை அடிமைத்தனமான சாதியத்திற்கு எதிரான குரல் கவிதையில் முனைப்புற்றிருந்தது.  இதனைத் தொடந்து வந்தக் காலங்களில் குறிப்பாக இலங்கையில் முனைப்புற்ற இனவாதம்  கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமாக முனைப்புற்ற போது அவ்விடயம் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் முக்கியமாக பேசுப்பொருளாக இருந்தது. அதேசமயம் நவீன தமிழ் கவிதையின் ஒரு பிரிவான புதுக்கவிதையும் இக்காலப் பகுதியில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன. இலக்கிய வரலாற்று அடிப்படையில் நோக்குகின்ற போது புதிய சமூகச் சூழல், மாற்றங்கள் என்பனவற்றுக்கு அமைய இலக்கியத்தின் உள்ளடக்கம் மட்டுமல்ல, வடிவமும் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன. புதுக் கவிதை யாப்பு வடிவங்களை இறுக்கமாக கடைப்பிடிக்காமையினால் இத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் யாவரும் கவிதை எழுத கூடியதாக இருந்தது. இதற்காக புதுக்கவிதைகள் யாவும் சமூகப்பிரச்சனைகளை மையமாக கொண்டிருந்தன என்பதுதல்ல.  அந்தவகையில் எழுபதுகளுக்கு பின் ஈழத்து கவிதைத்துறையில் புதுக்கவிதையின் செல்வாக்கு மிகுந்த வீச்சுடன் காணப்படுகின்றது. அதே சமயம் மரபுக் கவிதையின்; தாக்கத்தையும்; இக்காலத்தே தோற்றம் கொண்ட கவிதைகளிலும் காணக் கூடியதாக இருக்கின்றது.  இந்தப் பின்னணியில் கவிதைத்துறையில் காலடி வைத்தவர் வதிரி சி. ரவீந்திரன். வௌ;வேறு காலங்களில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு மீண்டு வந்த நாட்கள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. ஈழத்தின்; மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்களின் முன்னுரை ரவிந்திரனின் கவிதைகளை சமூக தளத்தில் வைத்து சிறப்பாக அறிமுகப்படுத்துகின்றது.  இன்றுவரை எழுதி வருகின்றவர்;. இவரை புதுக் கவிஞராக அடையாளப்படுத்துவதா அல்லது மரபுக் கவிஞராக அடையாளப்படுத்துவதா என்ற வரையறைப்பில் பல தயக்கங்கள் காணப்படலாம். இந்நிலையில் பழமைக்கும் புதுமைக்கும் இடைபட்ட இவரை கவிஞராகவே அடையாளப் படுத்;த முடியும்.
மனித வாழ்வுக் குறித்த நேசிப்பு ரவிந்திரன்  கவிதைகளின் ஆன்மாவாக விளங்குகின்றது. மனிதனுக்கு மதிப்பு தரும் அந்த மனிதாய பண்பே சமூக முரண்பாடுகள் மீதும் அதன் போலி ஆசாரங்களின் மீதுமான கோபமும் கலக உணர்ச்சியும் வெளிப்படுகின்றது. இவ்வம்சம் இக்கவிஞனின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும். மேதினம்என்ற கவிதை(மெல்லிசை பாடல்) இதற்கு தக்க சான்றாகும். அக்கவிதையில் உழைக்கும் மக்கள் பற்றி இவ்வாறு கூறுகின்றார்.
பாட்டாளி தோழரின் தினமது மேதினம்
பாரினில் பிறந்தது மேதினம்
நாட்டினில் தோழர்கள் வியர்வையிலே
நலமுடன் வந்தது மேதினமே!

உழைத்தவன் உதிரம் சிந்தியே பாரில்
உயிர்கள் வாழ்வு மலந்திடவே
விதைத்தவன் வாழ்வில் ஒருதினமின்று
விடிந்தது இன்று மேதினம்.(ப.100)

தெழிலாளர்கள் விவசாயிகளின் பல்வேறுகையான அவலங்களையும் உழைப்பு சுரண்டலையும் சித்திரிக்க முiவாதாக இவ்வரிகள் அமைத்திருக்கின்றன. அவ்வாறே உழைக்கும் மக்கள் குறித்து பாடுகின்ற போது தமது முன்னைய கவிஞர்களின் அனுபவத்தை விட மக்களின் அனுபவமே இக்கவிஞரில் விரவி நிற்கின்றது. அந்தவகையில் மெல்லிசை பாடலுக்குரிய வடிவத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்டிருப்பதை மேல் வரும் கவிதையில் காணக் கூடியதாக உள்ளது. அவரது முற்றத்து மல்லிகை என்ற கவிதை காதலுணர்வுப் பற்றிய ஒன்றாகும். இக்விதை அவரது ஆரம்பகால கவிதை முயற்சிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இக்கவிதை காதலை பாடுகின்றது என்ற விடயத்தை மாத்திரம் கொண்டு அதனை ஆரம்ப  கவிதை முயற்சியாக கொள்ள வேண்டிய அவசியமில்லை. இக்கவிஞரின் ஏனைய கவிதைகளுடன் ஓப்பிடுகின்ற பொது அக்கவிதையில் வெளிப்பட்டு நிற்கின்ற சமூக தளத்தை அடிப்படையாக கொண்டே இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது.
அவ்வாறே தழிழர் சமூகவமைப்பில் புரையோடி போயியுள்ள சாதிய அமைப்புக் பற்றியும் அது தோற்றுவிக்க கூடிய ஒடுக்கு முறைறை சுரண்டல் பற்றியும் அவ்வொடுக்கு முறைகளை  எதிர்த்து அம்பலப்படுத்துகின்ற கலக உணர்வுகளும் இக்கவிஞனில் வேர்கொண்டு கிளைப்பரப்புகின்றது.
எட செல்லன்
உன்ரை கருப்பணி
உருசையடா!
ஒரு முட்டி வீட்டை
கொண்டு வா
எனச் சாற்றுகிறார்
அவர் பெரியவர்

ஐயா நான் சீவிறேல்லை
மகன்தான் சீவிறான்
அவனிடம் சொல்லுகிறேனாக்கும்
என்று அவன் குழைய
ஏறுப்பட்டி தளநாறுடன் வந்த மகன்
என்ன காணும்
அடிமைகள் குடிமைகள் என்ற நினைப்போ?
நாமும் மனிதர்கள் தாம்.
புழைய நயினார் காலம்
பாறி விழுந்திட்டுது.
எங்கள் உழைப்பை இன்னும் உறுஞ்சவா
எண்ணுகிறீர்?
வையும் பணத்தை;தை: விரும்பினால்
தூக்கும் முட்டியை கையில்
என்று கீழே வைக்கிறான்.
நாயினார் பார்கிறார்
புதுமையாக அவனை. 
இவ்வரிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைமை குறித்து சமூகப் பிரச்சனைகள் குறித்து விழிப்புக் கொள்ள தொடங்கி விட்ட- தொடங்கியுள்ள யதார்த்த நிலையைமை அழகுற கவிதையாக்கியிருக்கின்றார். இவரது பாம்பு சாகவில்லை, அடங்காத் திமிர், இயல்புநிலை, உபதேசம் ஆகிய கவிதைகள் யாழ்பாண சாதிய முறைமையையும் அதற்கு எதிரான கலக உணர்வுகளையும் பதிவாக்கியிருககின்றன.
அவ்வாறே இந்நாட்டில் இனவாதம், இனவெறி குமிழ் விட்டு மேற்கிளம்பிய போது ஈழத்து படைப்பாளிகளிடையே இரண்டு விதமான போக்குகள் முனைப்படைந்துக் காணப்பட்டன. முதலாவது அணியினர், இனப்போராட்டம் என்பது வர்க்க விடுதவைக்கு அப்பாற் பட்டது என்ற வகையில் அவற்றைக் கவனத்திலெடுக்க தவறிவிட்டனர்.  தொடர்ந்தும் வர்க்க விடுதலை என்ற நிலையில் தமது செயற்பாடுகளை முடக்கி கொண்டனர். இன்னொரு பிரிவினர்  இன விடுதலைப் போராட்டமே முக்கியமானது, அதற்கப்பாலான வர்க்க முரண்பாடுகள் பின்தள்ளப்பட வேண்டியவை என்ற நிலையில் தமது இயக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அந்தவகையில் சரியான- நேர்மையான அரசியல் தளத்தில் முன்னெடுக்கப்படாத குறும் தமிழ் தேசிய இனவிடுதலைப்போராட்டம் சக இயக்கங்களை மட்டுமல்ல மக்களையே கொண்டு குவித்து இறுதியில் படு மோசமான சிதைவை சந்திக்க நேர்ந்தமை துரதிஸ்டவசமான நிகழ்வாகும். மறுப்புறத்தில் இந்நாட்டில் சிங்கள இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குணத்தை கொண்டிருந்ததுடன் தமிழருக்கு எதிராக மேற்கிளம்யிருந்த பேரிவாத ஒடுக்கு முறையை காணத்தவறியமை இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும். இடதுசாரிகளே இதனை கவனத்தில் கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் வேறு யார் இது தொடர்பாக கவனத்திலெடக்க முடியும்? இவ்வாறானதோர் சூழலில் இது குறித்து  இக்;கவிஞரின் மீண்டு வந்த நாட்கள்( தொகுப்பின் தலைப்பு) என்ற கவிதையில் பின்வரும் வரிகள் கவனத்தில்  கொள்ளத்தக்கது:
அகதி முகாமாம் வாழ்வை
அனுதாபமாக பார்த்தோர்
ஏதிலிகளான எமக்கு
ஏலுமான உதவிகள் புரிந்தனர்.
மீண்டு வந்த நாங்கள்
சொந்த இடம் மீண்டபோது
எமது நிலம் ஆதி நிலையில் கிடந்தது.
சொந்தங்களைப் போல்!
இப்போ
ஏங்கள் இருப்புகளையும்
இழந்து…..
இழப்பதற்கெதுமில்லையென
மீண்டு வந்த நாட்களின்
வடுக்களோடு!

இனமுரண்பாடுகள் அதன் பின்னணியில் ஏற்பட்ட இழப்புகள், பண்பாட்டு சிதைவுகள் இவைக் குறித்து கவலைக்கொள்கின்ற கவிஞர், இதயம் கொண்ட சராசரி மனிதனாக நின்றுக் கொண்டே அத்தகைய உணர்வுகளை வெளிக் கொணர்கின்றார்.
ஒரு ஒடுக்குமுறைக்குட்பட்ட சமூகத்தின் பின்னணியில் தம் எழுத்துக்களை பட்டைத் தீட்டுகின்ற நேர்மை மிக்க எழுத்தாளர் ஒருவரின் பார்வை ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதாகவும் கரிசணைக் கொள்ளும் என்பதற்கு சாட்சியாக இவரது அந்த இரயில் போகிறது என்ற கவிதை அமைந்திருக்கின்றது. அக்கவிதையின் பின்வரும் வரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றகன.
காதலனை பிரிந்து செல்லும்
காதலின் உயிர்த் துடிப்பு
தலைமகனைப் புதைத்த மண்ணை
தடவி முகர்ந்துவிட்டு
மதலை மொழிக் குழந்தையழ
மார்பணைத்துப் பால் கொடுக்கும்
அபலைப் பெண் அழுதழுது
ஏறுகிறாள் சயில் தனிலே!
உள்ளும் நிறைந்த இருள்
எதிர்கால உலகு மிருள்
கள்ளமில்லா துழைத்தவர்கள்
கலங்கி மனம் புழுங்க
அந்த ரயில் போகிறது
மனப் புகையை கக்கிறது(ப.26)
மலையக மக்கள் இந்நாட்டில் காலடி வைத்த கால முதலாகவே பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கும் சுரண்டலுக்கும் உட்படே வந்துள்ளனர். இந்நாட்டில் அதிக எண்ணிக்கையான தொழிலாளர்களை உள்ளடக்கிய சமூகம் என்றவகையில் இந்நாட்டின் பொருதார வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். இந்நாட்டின் அபிவிருத்தியில் இம் மக்களின் உதிரம் இரண்டற கலந்துள்ளது. அத்தகைய மக்கள் கூட்டத்தினரை மனிதர்களாகவே கருதாக இந்நாட்டின் ஆதிக்கச் சக்திகள் குறைந்த தொழிலாளர்களை கொண்டு கூடிய லாபத்தை சம்பாதிக்கும் பொருட்டு ஸ்ரீமா-சாஸ்திரி ஓப்பந்தத்தை ஏற்படுத்தினார். இந்தியாவுக்கு இலங்கை அண்மையில் உள்ள அதேசமயம், அச்சுறுத்லுக்குரிய சிறிய நாடு என்ற வகையிலும,; மறுப்புறத்தில் அன்றைய சூழலில் சீனா பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள்- பர்மா இந்தியர்களை துரத்தியடித்த சம்பவங்கள் இந்தியா இந்த ஒப்பந்தத்திற்கு உட்பட வேண்டிய நிர்ப்பந்த்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக மலையக மக்களின் சமூக இருப்பு பாதிக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கை மனிதானிமானமற்றவகையில் சிதறடிக்கப்பட்டன. அத்தகைய அலைகழிப்புகளினூடே சிதறடிக்கப்பட்ட வாழ்வுக் குறித்த கவிஞரின் வரிகள் நுண்ணுணர்வு மிக்க பரந்த இதயத்தை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன. மலையகம் பற்றிய இவரது பிறிதொரு கவிதை எழுத்து.
இவரது கவிதைகளை ஒட்டு மொத்தமாக நோக்குவதற்கு ஓர் ஒப்புவமை வசதிக் கருதி பிறிதொரு கவிதையுடன் ஓப்பு நோக்குவது அவசியமானதொன்றாகும்;;.
நம்மீது அவர்களெறிந்த
கற்களை
பொறுக்கி வையுங்கள்
மார்பில் முத்தமிட்ட
துப்பாக்கி ரவைகளை
எடுத்து வையுங்கள்.
இரத்தம் கசிந்த
துடியடித் தழும்புகளை
எண்ணி வையுங்கள்.
ஏனென்hல்-
அவர்கள்
வட்டிக்கு வாங்கியே
பழக்கப்பட்டவர்கள். (மேற்கோள் வானமாமலை .நா, புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும், ப.61)
இவ்வரிகளில் கோபாவேசமும் பழிவாங்குகின்ற உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கின்றது. அதேசமயம் சமுகமாற்றத்திற்கான எந்தவிதமான அக்கறையும் இல்லாதிருப்பதை அவதானிக்கலாம். அந்தவகையில் கோப உணர்ச்சியும் கலக உணர்வு மாத்திரம் சமூகமாற்றத்தை கொண்டு வரும் என்பதல்ல. ஆனால் ரவிந்திரனின் கவிதைகளை பொருத்தமட்டில் அத்தகைய நிலையிலிருந்து அந்நியப்பட்டு மக்களையொட்டியதாக கிளைபரப்புகின்றன.

சமூகம் மாற வேண்டும் என்ற உணர்வு இக்விஞனின் வெளிப்பட்டிருந்தாலும் இந்த மாற்றத்துக்கான திசை மார்க்கம்- வழிமுறைகள் குறித்த தெளிவான சிந்தனைகள் இல்லாதிருப்பதனையும் காணலாம். எடுத்துக் காட்டாக பின்வரும் கவிதை வரிகளை குறிப்பிடலாம்.
எங்கள் நாட்டில்
தொழிலுக்கு ஒரு சாதி
சாதிக்கொரு தொழில்
இழிவு சொல்லி அழைத்திடுவோம் இங்கு
எந்த தொழில் செய்தாலும்
அந்தச் சாதியிலா நாம் பிறந்தோம்?
உயர் குலத்துப் பெருமையுடன்
உழைத்துப் பொருள் சேர்த்து
உயர்ந்த குடிகோத்திரத்து
உத்தமராய் நிமிந்து நிற்போம்!
உயர் குலத்துப் பெருமையுடன் ஃஉழைத்துப் பொருள் சேர்த்துஃ உயர்ந்த குடிகோத்திரத்துஃ உத்தமராய் நிமிந்து நிற்போம்! ஏன்ற வரிகள் சில கேள்விகளை எழுப்புகின்றது. இவ்விடத்தில் எந்த அளவுகோல்களை முன்னிறுத்தி “”’உயர்ந்த சாதி- தாழ்ந்த சாதி என வரையறை செய்வது.  எந்த யோக்கியாம்சத்தை வைத்துக் கொண்டு இவ்வளவுக் கோள்கள் முன்னிறுத்தப்படுகின்றது எனப் பார்த்தால் அதிகார வர்க்கத்தின் தொங்கு திசையாக திகழ்கின்ற பண்பாட்டு புனிதங்களின் பின்னணியிலே அவை நடந்தேறுவதைக் காணலாம். இந்தப் புள்ளியில் தான் ஆட்சியாளர்களும் மத அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் சாதிய வெறியர்களும் சந்திக்கின்றனர். இக்கவிஞர் குறிப்பிடுகின்ற அத்கைய அதிகாரம் சார்ந்த பண்பாட்டு மாற்றம் என்பது கூட ஒருவகையில் மேல்நிலையாக்கம் பெறுவதற்கான சமரசமாகவே அமைகின்றது. அதற்காக தாழ்த்தப்பட் மக்கள் சமூகபெயர்ச்சி அடையக் கூடாது என்பதல்ல. அத்தைய மாற்றத்தை ஒரு ஓடுக்குமுறை சார்ந்த பண்பாட்டுடன் இணைத்து பார்ப்பது எந்தளவு நியாயமானது?   இப்பார்வை தலித் சிறு முதலாளித்துவம் சார்ந்த பார்வையாகும்.
யுத்தச் சூழலில் இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இஞைர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட இனந்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். ரஜனி திராணகம, அன்ரனி நோபேட், செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லாம். இந்தப் பின்னணியில் நமது எழுத்தாளர்களின் மௌனத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது. இன்று இந்த மௌனம் கலையப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சியாக யோ. கர்ணன், ஷோபாசக்தி (புலம்பெயர்ந்திருந்ததனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது.) முதலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக்கின்றன. சுதாராஜ் சிறுகதைகள், தேவ முகுந்தனின் கண்ணிரினூடே தெரியும் வீதிமுதலிய தொகுப்புகளுக்கு பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் எழுதிய முன்னுரைகளில் இது பொறுத்த தெளிவான பார்வையை முன் வைக்கின்றார்;. அவ்வாறே அ. மார்க்ஸின் இலங்கை குறித்த ஆய்வுகள்; தமிழ் தேசிய போராட்டம் பற்றிய நடுநிiலான பார்வையை முன் வைக்கின்றது.   இக்கவிதைத் தொகுப்பில் பேரினவாதம் வெளிக் கொணரப்பட்டளவிற்கு தமிழ் பாசிசத்தின் இன்னொரு பக்கம் வெளிக் கொணரப்படவில்லை என்பது இத்தொகுப்பில் காணப்படுகின்ற மிக முக்கிய குறைப்பாடுகளில் ஒன்றாகும்.
இன்னொரு  முக்கியமாக அம்சம் இவ்விடத்தில்  சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எழுத்தாளர்களிடைய காணப்படுகின்ற தயக்கம். உதாணத்திற்கு இலங்கையில் இனமுரண்பாட்டின் விளைவாக தோன்றிய இனமோதல் குறுந் தமிழ் பாஸிச சக்திகளாலும் பேரினவாத்தாலும் கூர்மையடையவே செய்திருக்கின்றனர். குறுந்தமிழ் தேசியவாதம் முறியடிக்கப்பட்டு வெற்றிப் பெற்ற பேரினவாதம் மக்களுக்கு பொருத்தமான தீர்வு திட்டங்களை முன்னெடுக்காத நிலையில் மக்கள் மீண்டும் குறுந்தமிழ் தேசியத்தை ஆதரிக்கின்றவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் இனமோதலின் சகல பரிமாணங்களை வெளிக் கொணர வேண்டிய தேவையிருக்கின்றது.  இந்த சூழலில் தமிழ் தேசியத்தின் குறுகிய அரசியல் போக்குகளை விமர்சித்தால் தாங்கள் மக்களிலிருந்து அந்நியப்பட்டு போவோம் என்ற எழுத்தாளர்களின் அச்சம் அவை குறித்த ஆரோக்கியமாக கருத்தாடல்கள் வெளிவராமைக்கு  பிரதான காரணமாக அமைந்திருக்கும் என  எண்ணத் தோன்றுகின்றது(லெனின் மதிவானம் நேச்காணல், ஜீவநதி 2013-ஜூன்).
இன்னும் சற்று ஆழமாக சமூகப் பிரச்சனைகளை தோன்ற முற்படுவாராயின் இன்னும் காத்திரமான கவிதைகளை வெளிக் கொணர்வார் என எதிர்பார்க்கலாம்.
இவர் தமது கவிதைகளில் கையாண்டுள்ள வடிவம் குறித்தும் சில கருத்து கூற வேண்யுள்ளது. மரபு ரீதியான யாப்பு வடிவங்களை பயன்படுத்துகின்ற இவரது கவிதைகளில் பொருளடக்கத்திற்கும் மெல்லிசைக்கும் முதன்மைக் கொடுப்பதனால் அவரது இந்த பாடல் சமகால சமூகப் பிரச்சனைகளை மாத்திரமன்று மக்களை இலகுவாகவும் சென்றடைய கூடியதாகவும் அமைந்துக் காணப்படுகின்றன.
பாட்டாளி தோழரின் தினமது மேதினம்
பாரினில் பிறந்தது மேதினம்
இக் கவிதையில் ஏதாவது ஒரு சொல்லை அல்லது படிமத்தை நீக்கி விட்டால் கவிதை சிதைந்து விடும். அதே நேரத்தில் எதுகையும்(பாட்டாளியில் உள்ள பாவும் பாரினில் வரும் பாவும்) மோனையும்(மேதினம்)இக்கவிதையில் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் புதுக்கவிதை வடிவத்தையும் இவர் கையாளத்தவறவில்லை.
வடக்கத்தையாள்
போடி வெளியிலை
என்ற குரல்
காதைத் துளைக்கிறது.
ஏரம்புத் தடியன்
வுள்ளியின் முடியை
கையால் இழுத்து
நிலத்தில் வீழுத்தி
அவள் சுமந்த
பொதியை தான்
தலையில் வைத்து
தூக்கிச் செல்கிறான்!
என்ற வரிகளை நோக்குகிக்ற போது வௌ;வேறு படிமங்களை கொண்ட தொகுதியாக இக்கவிதை அமைந்துள்ளது. இக்கவிதையிலிருந்து ஒரு சொல்லை அல்லது படிமத்தை நீக்கி விடுவதால் கவிதை சிதைவடையாது. கவிதையின் வெளிப்பாட்டு முறைகளை கொண்டு அவற்றை படிமக் கவிதை, உத்திமுறைக் கவிதை, விவர்ணக் கவிதை என் வகைப்படுத்தலாம். ரவிந்திரனின் கவிதைகளை நோக்குகின்ற போது அவை சமூக பிரச்சனைகளை மனித உணர்வு நிலைக்குட்பட்டு- அல்லற்படும் மக்களின் வாழ்வை கவிதையாக்க முனைந்திருக்கின்றார். அவரது சில கவிதைகளில் புதுக் கவிதை வடிவமும் மரபுக் கவிதை வடிவமும் இணைந்துக் காணப்படுகின்றது. இத்தொகுப்பில் காணப்படுகின்ற பெரும்பாலன கவிதைகளில் இந்த போக்கே முனைப்புற்றிருக்கின்றது எனலாம். எடுத்துக் காட்டாக அந்த ரயில் போகிறது, மனத்திரைக்குள், முற்றத்து மல்லிகை, போலிகளை இங்கு தேடுதுபார்,வள்ளம் வரவேண்டும், இயல்புநநிலை, கையடக்க தொலைபேசி, ஊயிருக்குயிரான உறவுகள், உள்ளக் குமுறல், புரியாமையும் புரியும், அடிமைக்கரங்கள், பிறந்த மண்ணில்..!, முதலிய கவிதைகளில் இந்த போக்கினைக் காணலாம். இலக்கியத்தில் வடிவம் பற்றி ஆதவன் தீட்சண்யா பின்வருமாறு கூறுகின்றார்.
வடிவங்களைக் கட்டிக்கொண்டு உருண்டு புரளும் வலுவோ வீம்போ எனக்கில்லாதபபடியால் என் சக மனிதர்களோடு உரையாடவிரும்புவதை எவ்வௌ;வாறு தோன்றியதோ அவ்வவ்வாறே எழுதிக் கொண்டிருக்கின்றேன். மதியாழத்தையும் நுண்மான் நுழைப்புலத்தையும் கவசமாகக் கொண்டிராத எனது எளிய வாசகர்களே அவற்றிலிருந்து கவிதையெனவும் உரைநடையெனவும் கண்டெடுத்து வகைப்படுத்தி தேவையானதை தம்வயமாக்கிக் கொண்கின்றனர். (ஆதவன் தீட்சண்யா கவிதைகள்,2011 சந்தியா பதிப்பகம், சென்னை. ப.8).
இத்தகைய நாகரிகம் இக்கவிஞரிலும் விகர்சிக்கின்றது.
இறுதியாக ஒன்றைக் கூறலாம். அவ்வவ் காலங்களில் இலக்கிய உலகிலிருந்து அஞ்ஞா வாசத்தை மேற்கொள்கின்ற இந்நூலாசிரியர் எமக்காக தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எமது யாசிப்பாகும். காலத்திற்கு காலம் அவர் வகிக்கின்ற அரச தொழிகள் இதற்கொரு காரணம் என்ற போதினும் அவற்றையும் மேவி சிறகடிக்கக் கூடிய சூழல் அவருக்;கிருக்கின்றது.

காலத்தின் தேவையையும்  இத்தொகுப்பின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த எஸ். கொடகே சகோதரர்கள் நிறுவனத்தினர் இந்நுலை அழகுற வெளிக் கொணர்ந்துள்ளனர். விலை. 250 ரூபா(இலங்கை).

No comments:

Post a Comment