Tuesday, August 17, 2010

மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு

ஏற்பாடு முச்சந்தி இலக்கிய வட்டம்: அதன் ஆலோசகர்களில் ஒருவரான ந. இரவீந்திரன் தலைமை தாங்கினார். மலையகத்தின் மூத்த படைப்பாளிகள், கல்வியியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் முதல் இளம் தலைமுறை ஆர்வலர்கள் வரை பலரும் கலந்து கொண்டு ஆரோக்கியமான கருத்தாடற் களமாக ஆக்கியதால் சந்திப்பினை அர்த்தமுள்ளதாக்கியிருந்தனர்.

தலைமையுரையில் இரவீந்திரன், ஒருதசாப்தங்களின் முன்வரை அதற்கு முன்பு இருந்த எழுச்சியின் பேறாக கார்க்கி பெரிதும் ஆதர்ச சக்தியாக இருக்க முடிந்தது. இன்றைய தலைமுறையோ செல்லும்வழி இருட்டு என்ற திகைப்புடன் முச்சந்தியில் நின்று மார்க்கம் எதுவென அறியாது மயங்கும் நிலையில் அல்லாடுகிறது. அந்தவகையில் பெயர்மாற்றம் காலப்பொருத்தமானது. நாம் அனைத்தும் அறிந்தவர்கள், வழிப்படுத்த வந்திருக்கிறோம் என எவரும் சொல்லமுடியாத நெருக்கடி நிலை இன்று உள்ளது. முச்சந்தியில் கூடும் மக்களின் இருப்புக்கு நிகராக முன்முடிவுகள் இல்லாமல் இங்கே விவாதிக்க வேண்டியவர்களாக கூடியுள்ளோம்.

மனந்திறந்த கருத்தாடல்கள் வாயிலாக எமக்கான மார்க்கத்தை கண்டறிந்து செயற்பாட்டில் நாம் முன்னேற வேண்டும். மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய இடதுசாரி சக்திகள் ஒன்றில் வலதுசாரி சந்தர்ப்பவாதிகளாக அல்லது அதிதீவிர இடதுசாரி வாத வாய்ச்சவடால் பேர்வழிகளாக ஆகிவிட்டார்கள். இன்று அதிதீவிர இடதுசாரிக் கோசங்களால் தம்மைப் பெரிய புரட்சியாளர்களாக வேடம் போடுபவர்கள் இளம் தலைமுறையை நச்சுப்படுத்துபவர்களாயுள்ளனர்.

முப்பது வருட யுத்தத்தினால் நாடு முழுமையிலுள்ள மக்கள் நல நாட்ட சக்திகள் அழிக்கப்பட்டதோடு இன்றைய வெற்றிடத்துக்கு தொடர்புள்ளது. அதேவேளை இந்த நெருக்கடி எமக்கு மட்டும் உரியதல்ல. இயல்பான வாழ்வில் முன்னேறும் இந்தியாவிலும் அரசியல் நெருக்குவாரங்கள் இடதுசாரிகளுக்கு பெரும் இடர்ககளை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்றைய புதிய சூழலுக்கு அமைவான மார்க்சியப் பிரயோகத்துக்கு ஏற்ற விவாதங்கள் அவசியப்படுகின்றன.

அறிமுக உரையை நிகழ்த்திய திரு. வ. செல்வராஜா மலையக மக்கள் தொடர்பாகவும் அதன் பின்னனியில் மலையக தேசியம் தொடர்பாகவும் தமது அறிமுக உரையை நிகழ்த்தினார். இன்று மலையக மக்களின் சமூக இருப்பு தொடர்பான வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இம்மக்களை மலையக மக்கள் என்று அழைப்பதா? அல்லது இந்திய வம்சாவழி தமிழர் என்று அழைப்பதா? என்பதாகவே அவ்வாதங்கள் அமைந்திருக்கின்றன. திரு செல்வராஜ மலையக மக்கள் என்று அழைப்பதை அழுத்தமாக வழியுறுத்திய அவர் தமது கருத்தை பின்வருமாறு முன்வைத்தார்:
மலையக மக்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வியல் அம்சங்களை ஒட்டி பார்க்கின்ற போது அவர்களை மலையக தமிழர் என்றழைபபதே பொருத்தமானது. மலையக தமிழர் என்று அழைக்கின்ற போது அதன் ஆத்மாவாக அமைவது பரந்துபட்ட உழகை;கும் மக்களாவார். ஒரு புறமான இன காலனித்துவ ஆதிக்கமும், சமூக ஒடுக்கு முறைகளும் மறுபுறமான சமூக உருவாக்கமும் இணைந்து இம்மக்களை தனித்துவமான தேசிய இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் இந்திய வம்சாவழி தமிழர் என்ற பதம் மலையக சமூக அமைப்பின் பண்பாட்டு பாராம்பரியங்களை அதன்; பரந்துப்பட்ட உழகை;கும் மக்களின் நலனிலிருந்து அன்னியப்படுத்தி பார்ப்பதாகவே அமைந்திருக்கின்றது.
யாவற்றுக்கும் மேலாக இந்திய முதலாளிகளின் நலனை காக்கின்ற அடிப்படையில் தான் இந்திய தமிழர் என்ற பதம் பாவிக்கப்பட்டு வருகின்றது. இன்று மலையகத்தில் தோன்றியுள்ள புதிய மத்தியத்தர வர்க்கம் இப்போக்கை அங்கிகரிப்பதாவும் படுகின்றது. இப்போக்கானது மலையகத்தின் ஒட்டு மொத்தமான சமூக இருப்பையும் சிதைப்பதாக அமையும்’ என்றார்.
ஆதவன் தீட்சண்யா தனது உரையில் சென்ற வருடம் ஒக்டோபர் மாதத்தில் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தந்தபோது அட்டன் வந்தமையுடன் தொடர்புபடுத்தி இரண்டாவது பயனங்குறித்து பேசினார், இந்தியாவிலும், உலகெங்குமே இடதுசாரி இயக்கங்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன. இது தொடர்பில் தென்னமெரிக்க அனுபவங்களை வெளிப்படுத்தும் நூல் ஒன்று தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வழங்கப்பட்டுள்ளமை காலப்பொருத்தமுடையது.

தனது உரையை ஆதவன், மார்த்தா ஹர்னேக்கர் எனும் மார்க்சிய இடதுசாரிகளும் புதிய உலகமும் எனும் அந்த நூலை அடிப்படையாக முன்வைத்து ஆற்றியிருந்தார். உலகெங்கிலும் இடதுசாரி இயக்கங்கள் புதிய உலகச் செல்நெறிக்கு அமைவாக மார்க்சியத்தை பிரயோகிக்க இயலாத நிலைக்க அமைவாக மார்க்சியத்தை பிரயோகிக்க இயலாத நிலைக்கு உள்ளாகியுள்ளன. சோவியத் பானியிலான கட்சியமைப்பு இன்று கேள்விக் குறியாகியுள்ளது.
அன்றைய எதேச்சாதிகார ஆட்சியில் ருஷ்யாவில் கட்டியெழுப்பப்ட்ட மாதிரியை ஜனநாயக நாடுகளின் கம்யூனிஸ் கட்சிகளைக் கட்டியெழுப்பிட முடியாது. சோவியத்பாணி தோல்வியடைந்ததாலேயே மார்க்சியம் தவறென்று சொல்லிவிடவும் முடியாது. தோசை சுட்ட ஒருவர் கருக விட்டதாலேயே சமையல் குறிப்பு நூல் தவறென்று சொல்லிவிட முடியாது. உண்மையில் இன்றைய சூழலுக்கு பிரயோகிக்க ஏற்றவகையில் மார்க்சிடம் கற்றுக்கொள்ள இயலும்.

இவ்விடத்தில் இடதுசாரிகளாகிய நாம் எதனை செய்தோம் அல்லது எதனை செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்தல் அவசியமாகும். புழைய பெருமைகளை பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. பெருங்காய டப்பா எவ்வளவு காலத்திற்கு மனக்கும். இன்று உலகமயம் என்பது பாரதூரமான விளைவுகளை நம் மத்தியில் ஏற்படத்தியுள்ளது. அது தாராளமயத்தின் மூலமாக தேசிய எல்லையை தாண்டி ஒரு ஒற்றைச் சந்தையை உருவாக்குவதன் மூலமாக அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து வருகின்றனர். இங்கு மனிதர்கள் கூட விலைப் போகும் சரக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் தான் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் மக்கள் மத்தியில் இடதுசாரி மனோபாவம் கொண்ட ஆட்சியை உருவாக்கியுள்ளனர். இங்கு இந்நாடுகள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டன, எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளத் தவறின என்பது பற்றிய தெளிவான பார்வை அவசியமானதாகும்.

மேலும் இன்று இயங்க கூடிய இடதுசாரிகளை கட்சி சார்ந்த இடதுசாரிகள், சமூகம் சார்ந்த இடதுசாரிகள் என இரண்டுவிதமாக வகைப்படுத்தலாம். மக்களின் விடுதலைக்காக ஒரு ஸ்தாபனமாக இணைந்து சமூகமாறறப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற செயற்பாட்டாளராக செயற்படுபவர்களை கட்சிசார்ந்த இடதுசாரிகள் என கூறலாம். இதற்கு மாறாக கட்சியில் அங்கம் வகிக்காத அதேசமயம் அதிகார வர்க்கத்திற்கு எதிரான போர்க்குணத்தையும் செயற்பாடுகளையும் கொண்டுள்ளவர்களை சமூகம் சார்ந்த இடதுசாரிகள் எனக் குறிப்பிடலாம். இன்றைய சூழலில் புதிய தாராள மயமாக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இவ்விரு சக்திகளும் ஐக்கியப்படுவது காலத்தின் தேவையாகும். எனவும் ஆதவன் தீட்சண்யா தமது உரையில் குறிப்பிட்டார்.

இவ்வகையான சூழலில் இடதுசாரிகள் தமது புதிய சூழலுக்கு ஏற்றவகையில் தம்மை புனரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் நடைப்பெற்றன. இக்கலந்துரையாடலில் திருவாளர்கள். ஓ. ஏ. இராமையா, லெனின் மதிவானம், ஜெ. சற்குருநாதன், கே. மெய்யநாதன், அ.ந. வரதராஜா, கு. இராஜசேகர், முதலானோர் கலந்துக் கொண்டனர். நன்றியுரையை திரு. ஜே. பிரான்சிஸ் ஹலன் வழங்கினார்.

No comments:

Post a Comment