Thursday, December 2, 2010

அரங்கியலுக்கு புதிய பார்வை, புதிய பங்களிப்பு லெனின் மதிவானம்

( சி.மௌகுருவின் ‘மட்டகளப்பு மரபு வழி நாடகங்கள்’
என்ற நூல் பற்றி சில அறிமுக குறிப்புகள்)



ஆசிரியர்: சி.மௌனகுரு
வெளியீடு: விபுலம், மட்டக்களப்பு
மட்டகளப்பு மரபு வழி நாடகங்கள் என்ற நூல் 1983 ஆம் ஆண்டு பேராசிரியர் சி. மெனகுருவினால் தமது கலாநிதி பட்ட படிப்பிற்காக யாழ்பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடாகும். 1998 ஆண்டில் இவ்வாய்வேடு நூலாக வெளிவந்தது. இந்நூல் வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. இக்கால இடைவெளியில் இந்நூல் குறித்து உருப்படியான விமர்சனங்கள் ஏதும் வெளிவந்ததாக தெரியவில்லை. இன்றைய சூழலில் பராம்பரிய மரபுகளிலிருந்து முற்போக்கான அம்சங்களைப் பெற்று அவற்றினை காலத்துக்கேற்றவகையில் மாற்றம் செய்து நமக்கான நாடக மரபொன்றினை உருவாக்க வேண்டியுள்ளது. அந்தவகையில் இந்நூல் பற்றிய ஆய்வுகளும் மதிப்பீடுகளும் அவசியமாகின்றன. அத்தகைய ஆய்வுகளுக்கு அரங்கியலின் தோற்றம் குறித்த தெளிவு அவசியமானதாகின்றது.
நாடக அரங்கியல் வரலாற்றை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஒரு உண்மை தெளிவாக தெரியவரும். மனித சமூதாய வரலாற்றில் மனிதர்கள் தங்கள் செயல்களை பாவனை அல்லது பிரதி செய்ய முற்பட்டப்போது நடிப்பு தோன்றியது என்பர். புராதன சமூதாயத்தில் வேட்டையாடிய மனிதன் வேட்டைக்கு செல்வதற்கு முன்னர் அவர்கள் அதனை பாவனை செய்ய முற்பட்டனர். இத்தகைய மனித நடத்தைகளினூடாகவும் மற்றும் தெய்வ நடவடிக்கைகளின் மூலமாகவும் நாடகம் தோன்றியது.
இவ்வாறாக ஆரம்ப கால முதலாகவே நாடக அம்சங்கள் மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்று வந்திருப்பினும் அதனை அவனப்படுத்துவதற்கான முயற்கிகள் பிற்காலத்திலேயே தோன்றின. இவ்வப்படையில் தமிழ் நாடக இலக்கிய வரலாற்றினை நோக்குகின்ற போது நாடக அம்சம் நிறைந்த கூத்து நூல்கள் நாயக்கர் காலத்திற்கு பின்னரே தோன்றியுள்ளன. பள்ளு, குறவஞ்சி போன்ற நாடக இலக்கியங்கள் இவற்றிற்கு தக்க எடத்துக்காட்டுகளாகும்.
இந்தப் பின்னணியிலே ஈழத்து நாடக இலக்கிய நூல்கள் குறித்து நோக்குகின்ற போது கதிரைமலைப் பள்ளு (1478-1519) என்ற நூலே முதல் நூலாக கொள்ளப்படுகின்றது.
புpற்பட்டகாலங்களில் கனபதிஐயர், இனுவை சின்னத்தம்பி புலவர், கீத்தாம் பிள்ளை, மாதகல்மயில்வாகணம்,சுந்தரம்பிள்ளை,குமாரசாமிபுலவர் என இபபட்டியலை நீட்டிச் செல்லலாம். இத்தகைய நாடக முயற்சிகள் யாவும் ஈழத்து அரங்கியல் துறையில் ஏற்பட்ட ஆரம்ப முயற்சிகளாகவே காணபடுகின்றன. அரங்கியல் கோட்பாடுகளோ அல்லது ஆய்வுகளோ விருத்தி பெற்றிராத நிலையில் இவ்வாறான ஆரம்ப முயற்சிகள் கூட மொத்தப் பெரும் சாதனைகளாக இருந்தன.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஆங்கில கல்வியின் தாக்கம், ஜனநாயகம், தேசிய சிந்தனைகள் காரணமாக ஏற்பட்ட பொது மக்கள் நலநாட்டம் என்பனவற்றின் தாக்கத்தை அரங்கியலிலும் காணக் கூடியதாக உள்ளது. இக்காலச் சூழலில் கிங்ஸ்பரி எழுதிய மணோன்மணி, சந்திரகாசம் முதலிய நாடகங்கள் அரங்கியல் துறையில் செல்வாக்கு செலுத்துவனவாக அமைந்துக் காணப்பட்டன. புரான இதிகாச மரபுகளை துணையாகக் கொண்டு அவற்றில் சமூகம் சார்ந்த அம்சங்கள் புகுத்தப்பட்டன. இதன் இன்னnhரு பரிணாமமாகவே பேராசிரியர் க.கணபதிபிள்ளையின் வரவு அமைந்திருந்தது. இவரது நாடகங்களில் யாழ்பாண பேச்சு வழக்கு சிறப்பாகவே கையாளப்ப்டடுள்ளமை அரங்கியல் துறையில் முக்கிய சாதனையாக அமைந்திருந்தது.
1950களுக்கு பின், உலகளவில் தோன்றிய மக்கள் எழுச்சிகளினதும் சிந்தனைகளினதும் பின்னணியில் தேசியம் தேசிய இலக்கிய கோட்பாடுகள் என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முன்னெடுக்கப்பபட்டன. இத்தகைய பின்னணியில் அரங்கியல் சார்ந்த தமது பார்வையை செயற்பாட்டை பட்டைத் தீட்டிக் கொண்டவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன். அரங்கியல் தமது செயற்பாடுகளை முற்போக்கான திசையில் முன்னெடுத்துச் சென்றதுடன் “கலைக்கழக தமிழ் நாடகக் குழு” என்ற அமைப்பின் மூலம் புதிய தலைமுறையினரை அமைப்புசார்ந்த செயற்பாடுகள் நோக்கி அமைப்பாக்கம் செய்தமை இவரது மிக முக்கியமான பங்களிப்பாகும்.
இத்தகைய சிந்தனையின் பின்னணியில் தம்மை பிணைத்துக் கொண்ட அதேசமயம் சரித்திரவியல் கண்ணோட்டத்திலும் சமூதாய கண்ணோட்டத்திலும் அரங்கிலை ஆய்வு செய்த முதல் தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி. இவரது Drama in Ancient Tamil Society’ என்ற நூல் முக்கியமானதொன்றாகும். அரங்கியல் வரலாற்றை தமிழ் நாடக இலக்கிய வரலாற்று நோக்கில் ஆய்வு செய்வதாகவே இவ்வாய்வு காணப்படுகின்றது.
அண்மைகாலத்தில் ஆய்வுலகில் அறிமுகமான சொற்களில் ஒன்று அரங்கியலும் ஒன்றாகும். தமிழ் நாடக இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட புதிய பரிமாணங்களையும் நோக்கு நிலைகளையும் தொகுத்துக் காட்டும் நிலையில் அச் சொல் அமைந்துள்ளது.
மேனாட்டு கல்வி முறை நம்மிடையே பரவியதன் பயனாக பொதுவாகவே உலகில் வேகமாக பரவிவரும் அறிவியல் துறைகளின் செல்வாக்கு தமிழ் நாடக துறையிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாக இருந்தது. அத்துடன் தமிழர் சமூதாயத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக, கலாசார இயக்கங்களின் விளைவாகவும் தமிழ் அரங்கியல் துறையின் பரப்பும் பெருகி வந்துள்ளது.
இவ்வாறானதோர் சூழலில் பேராசிரியர் சி.மௌகுரு அரங்கியல் பேராசிரியர், அரங்க ஆய்வாரளர், இயக்குனர், பிரதி ஆக்குனர், என பல்துறைசார்நத ஆளுமையுடன் அரங்கியல் துறையில் தமது சுவடுகளைப் பதிக்கின்றார். இந்த பின்னணியில் மட்டகளப்பு மரபுவழி நாடகங்களை சமூதாய கண்ணோட்டத்துடனும் அரங்கியல் நோக்குடனும் ஆய்வு செய்துள்ளார்.
சடங்கிலிருந்து எவ்வாறு கூத்துக்களும் பின் அவை நாடகங்களாகவும் விருத்தி பெற்று வந்துள்ளன என்பது பற்றி தக்க ஆதாரங்களுடன் விளக்கும் இந்நூல், மட்டகளப்பு மரபு வழி நாடகங்களான வடமோடி, தென்மோடி கூத்து மரபுகளை கள ஆய்வில் பெற்ற தகவல்களினடிப்படையிலும் முதல் நிலை இரண்டாம் நிலை ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களினடிப்படையிலும் தமது ஆய்வினை முன்வைக்கின்றார். யாவற்றுக்கும் மேலாக இன்று மருங்கிவருகின்ற கூத்துகளான மகுடி கூத்து, பறைமேளக் கூத்து, வசந்தன் கூத்துக்கள் தொடர்பிலும் இவ்வாய்வு கவனம் செலுத்துகின்றது. இக் கூத்துக்கள் சமூக இருப்பு காரணமாகவும் மற்றும் கல்விப் புலத்தில் அவை புணரமைக்கப்படாதன் காரணமாகவும் அவை எவ்வாறு நகைப்புக்குரியதாக மாறி மருங்கி வருகின்றது என்பதும் எடுத்துக்காட்டப்படுகின்றது.
பிரதி அக்கம் செய்வதனாலோ அல்லது பாடப்படுவதனாலோ மட்டும் அது நாடகம் என்ற வடிவத்தினைப் பெற்று விடாது. நாடகம் என்பது நிகத்திக் காட்டப்படும் நிகழ்கலையாகும் என்ற அரங்கியல் கேபாட்பாட்டின் அடிப்படையில் மட்டகளப்பு மரபு வழி நாடகங்கள் குறித்து ஆய்வு செய்கின்றது இந்நூல். இந்த ஆய்வு பார்வை ஆய்வின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்று வந்திருப்பது இந்நூலின் தனித்துவமான சிறப்பாகும்.இவ்வாய்வில் பல்வேறு விதமான நாடக மரபுகள்- குறிப்பாக கிரேக்க ஆசிய மரபுகள் பற்றி சுட்டிக் காட்டப்பட்டிருப்பினும் மட்டக்களப்பு நாடக மரபு எவ்வாறு அச்சூழலுக்கு ஏற்றவகையில் எத்தகைய தனித்துவமான அம்சங்களுடன் விங்குகின்றன என்பது குறித்தும் அதன் பொதுமைகள் குறித்தும் நுலாசிரியர் சுட்டிக் காட்டத்தவறவில்லை.
வடமோடி தென்மோடி கூத்துக்களின் தோற்றம் வளர்ச்சி அமைப்பு முறை, கையாளப்படும் உத்திகள், ஆட்டக் கோலங்கள், உடைகள, ஒப்பனைகள்,; என்பனவற்றினை ஆய்வுக்குட்படுத்தி மட்டக்களப்புக்கான நாடக மரபோன்றினை உருவாக்கு முனைகின்றது இந்நூல்.
மேலும் இந்நூல், நாடகங்களுக்கும் ஏனைய துறைகளுக்கும் இடையிலான உறவுக் பற்றியும் ஆய்வு செய்கின்றது. புவியல், சமூகவியல், மெய்யில், உளவியல், சரித்திரவியல் முதலிய துறைகளையும் தமதாக்கி அதன் ஒளியிலேயே மட்டக்களப்பு மரப வழி நாடகம் தோட்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளமை இந்நூலுக்கு மேலும் பலம் சேர்ப்தாக அமைந்துள்ளது.
மட்டகளப்பில் தொழில் முறையான அரங்கியல் கலைஞர்கள் தோன்றாத நிலையில் அரங்கியல் துறையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை உள்வாங்காத அல்லது புணரமைக்கப்படாத நிலையில் பராம்பரிய மரபு வழி கூத்துகள் அழிந்த விடக் கூடிய அபாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக பறைமேளக் கூத்து மேற்கறித்த மாற்றங்களை உள்வாங்க தவறியதன் விளைவாக நகைப்புக் குரிய கூத்தாக மாறி மறைந்து வருவதனையும் காணலாம். அரங்கியல் துறையில் இத்தைய முரண்பாடுகளை இனங்கான்கின்ற நூலாசிரியர் அவற்றினை கல்விப் புலத்தில் ஆய்வு செய்வதன் ஊடாக ஏத்தகைய மாற்றங்களையும் விரத்திகளையும் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
எமது சூழலில் ஏற்படுகின்ற சமூதாயமாற்றங்களும் பதிய போக்குகளும் பராம்பரிய கூத்துக்களிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையும். அத்தகைய விருத்திகளும் மாற்றங்களும் எப்போதும் மானுட மேம்பாட்டை மையமாக கொண்டிருக்கம் எனக் கொள்ளவேண்டியதில்லை. அதனை சமூகமாற்றத்திற்குரியதாக மாற்றியமைக்க வேண்டியது தேசிய ஜனநாயக முற்போக்க மார்க்சிய சக்திகளின் கடமையாகும். இத்தகைய கலை இலக்கிய பிரவாகத்தில் சங்கமம் கொள்கின்ற ஓர் ஆய்வாளரின் முயற்சியாகவே இந்நூலாக்கம் அமைந்துள்ளது.
நூலில் இணைக்கப்பட்டுள்ள வரைப்படங்கள், இவ்வாய்வினை வாசகர் இலகுவாக புரிந்துக் கொள்ளக் கூடிய திறனை வழங்ககின்றது.
புதிய துறைகள் உருவாகின்ற போது அவற்றோடு நேரடி தொடர்புடையவர்களுக்கு மட்டுமே பயன்பாடு; உடையதாக தோன்றும். ஆனால் காலக்கிரமத்தில் அவைப்பற்றிய தகவல்களும் செய்திகளும் பரவுகின்றபோது அவை பொது மக்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமையும். இவ்வகையில் அரங்கியல் குறித்த காத்திரமான ஆய்வு நூல்கள் மிக குறைவு. அவ்வாறு செய்யப்பட்ட ஆய்வேடுகள் கூட பல்கலைகழகத்தினிலே முடங்கிவிட்டன. அவை வெறுமனே ஆய்வாரள்களுக்கும் நிபுனர்களுக்கும் பயன்படும் வகையிலே அமைந்துக்காணப்படுகின்றன. இக் குறையை ஒரளவு நிவர்த்தி செய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.
இதுவரை வெளிவந்த அரங்கியல் தொடர்பான ஆய்வுகளை ஒப்பு நோக்குகின்றபோது மூன்றுவிதமான போக்குகளை அடையாளம் காணலாம். முதலாவது பகுதியினர் குறித்ததொரு கூத்து மரபை எடுத்துக் கொண்டு அதன் வடிவத் தூய்மை கெடாதவாறு புதிய உள்ளடக்கத்தை புகுத்தினர். இரண்டாவது பிரிவினர், புல கூத்து மரபுகளிலிருந்து பல்வேறுப்பட்ட ஆடல் பாடல், அளிக்கை முறைகளை கவனத்திலெடுத்து அதனூடாக புதிய உள்ளடக்கங்களை புகுத்தினர்.முன்றாவது பிரிவினர் நமது கூத்து மரபுகளுடன் உலக நாடக மரபுகளையும் இணைத்த புதிய உள்ளடக்ங்களை புகுத்தினர். தமிழர சமூதாயம், பண்பாடு என்பனவற்றில் மாற்றம்ட ஏற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து – மாற்றத்தின் இயக்கவியலை உணந்து அதனடிப்படையில் தமிழ் நாடக மரபை புணரமைத்ததில் சி. மௌனகுருவின் சாதனை முக்கியமானதாகும். அந்தவகையில் ஆய்வாரள்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment