Sunday, June 12, 2011

காலந்தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்……! (திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்புகள்); லெனின் மதிவானம்

நன்றி. இனியொரு


சமூக வரலாற்றை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓருண்மை தெளிவாக தெரிய வரும். எந்தவொரு சமூகவளர்ச்சியும் அதற்கு பின்னணியாகவுள்ள சில முன்கோடிகளின் முயற்சிகளையும் உழைப்பினையும் அடிப்படையாகக் கொண்டே முகிழ்ந்து வந்திருக்கின்றன. அத்தகைய முன்னோடிகளின் வெற்றிகள் மாத்திரமல்ல தோல்விகள் கூட அடுத்த தலைமுறையினருக்கு ஆதர்சனமாக அமைந்திருக்கின்றன. தமது காலத்து உள்ளியல்புகளை உறுதியாக பிரதிப்பலிக்கும் மனிதர்களே காலம் கடந்தும் வாழ்கின்றனர். அக்காலச் சூழலின் சமூகதேவையை அறிந்து அவர்கள் வழங்கிய சாதாரண பங்களிப்புகள் கூட மொத்தப் பெரிய சாதனைகளாக அமைகின்றன. மலையக சமூக வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய திருமதி. மீனாஷியம்மாள் நடேசய்யர் இத்தயை சமூக ஆளுமைகளில்-முன்கோடிகளில் ஒருவராவார்.

இவ்வாறாக, மலையக சமூக வரலாறு குறித்த ஆய்வில் அதன் வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றியும் அக்காலக்கட்டத்து சமூக இயக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மீனாஷியம்மாள் பற்றிய அய்வுகள் ஆங்காங்கே சிறு சிறு குறிப்புகளாகவும் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளன. தி. சாரல் நாடன், கோ. நடேசய்யர் பற்றிய ஆய்வின் போது மீனாஷியம்மாளின் பங்களிப்பு பற்றியும் எழுதியுள்ளார். திருமதி. சுpத்திரலேகா மௌனகுரு மீனாட்சியம்மாள் நடேசையர்’ என்ற தலைப்பிலும் மற்றும் பெண் ஆளுமைகள் குறித்து எழுதிய பல கட்டுரைகளிலும் மீனாஷியம்மாளின் பங்களிப்பு குறித்து சுட்டிக் காட்டத் தவறவில்லை. திரு மு.நித்தியானந்தன் ‘மீனாஷியம்மாளும் மேடைப்பாடல்களும்’ என்ற தலைப்பில சிறப்பானதொரு ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். பேராசிரியர் செ. யோகராசா ‘ஈழத்து முதல் பெண் கவிஞர்’ என்ற தலபை;பில் கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். இவைத் தவிர திரு. அந்தனி ஜீவா தமது உரைகளிலும் கட்டுரைகளிலும் மீனாஷியம்மாளின் பங்களிப்பினை வௌ;வேறு வகையில் வெளிக்கொணர்ந்துள்ளார். இது போன்று பலர் மீனாஷியம்மாள் பற்றி எழுதியுள்ளனர். ஆயினும் அம்மையாரின் முழு ஆளுமையையும் வெளிக்கொணரத்தக்க வகையிலாக பன்முக ஆய்வொன்று இதுவரைத் வெளிவராமை துரதிஸ்டமானதொன்றே. திரு. நரேசய்யரின் பங்களிப்புகள் வெளிக் கொணரப்பட்ட அளவு அம்மையாரின் பங்களிப்பு வெளிக் கொணரப்படவில்லை என்றே கூற வேண்டும்.

மீனாஷியம்மாளும் அவரது கணவர் கோ. நடேசய்யரும் ஒரே அரசியல் அணியில் செயற்பட்ட அப+ர்வமான தம்பதிகளாவார். 1905 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் வங்கப் பிரிவினைப் நடந்தது. வங்கப் பிரிவினையை ஆட்சேபித்து தீரவாதிகளின் பகிஷ்காரம், சுதேசிய இயக்கம் ஆகியவற்றின் தாக்கம் இந்தியாவெங்கும் பரவியது அத்தகைய தேசிய உணர்வினால் உந்தப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தவர் நடேசய்யர். இளமைகால முதலே வணிக துறையில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருந்த நடேசய்யர் “வர்த்தகமித்திரன”; என்ற சஞ்சிகை நடாத்தியுள்ளார். அச்சஞ்சிகைக்கு ஆதரவு தேடியே இலங்கை வந்தார். இவரது இலங்கை வருகை அவரது வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

மலையக மக்கள் தாம் அனுபவித்து வந்த துன்பத் துயரங்களை கண்டு கொதிப்படைந்த நடேசய்யர் அம்மக்களின் விடுதலைக்கான பயணத்தில் தம்மையும் அர்ப்பணித்துக் கொண்டார். மலையக மக்களின் துன்பகரமான வாழ்வை எண்ணி அவர்களிடையே விடுதலையுணர்வை ஏற்படுத்தியதுடன் அம்மக்களை அமைபாக்கம் செய்யும் பணியிலும் ஈடுபாடு கொண்டு உழைத்த முன்னோடியாவார். இவ்வாறு சமூக வாழ்வையும் தமது சொந்த வாழ்வையும் ஒன்றாக சேர்த்து நேசிக்கின்ற பண்பினை நாம் நடேசய்யர் தம்பதிகளில் காண்கின்றோம். இத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதர்சனமாக அமைந்த நடேசய்யரின் காதலியே- இரண்டாவது மணைவியே மீனாஷியம்மாளாவார். இவர் உடுமலை நாராயணக்கவி பரம்பரையில் வந்தவர். இவர் சாதியடிப்படையில் முதலியார் வம்சத்தை சேர்ந்தவா என்பதை அறிய முடிகின்றது. அவ்வகையில் இவ்விருவரின் திருமனபந்தம் ஒரு கலப்பு திருமணமாகும். இவ்விடத்தில் இவர்களது திருமணம வாழ்வு எவ்வாறு சமுதாயம் சார்ந்ததாக அமைந்திருந்தது என்பதனை நோக்குவதற்கு இந்திய பழங்குடி மக்களிடையே செயற்பட்டு பாரிய புரட்சிக்கு தலைமை தாங்கிய சாம்ராவ் பாருலேகர் கோதாவரி தம்பதிகளின் வாழ்கையுடன் ஒப்பு நோக்குவது பொருத்தமானதாக அமையும். சமூக வாழ்வில் நேர்மையுடனும் சமூகவுணர்வுடனும் செயற்படுவொர்களுக்கு சாதி ஒரு தடையாக இருக்காது என்பதை இவர்களது வாழ்வு எடுத்துக் காட்டுகின்றது. சாதி இருக்கமடைந்திருந்ததொரு காலத்தில் இத்தகைய மரபு மீறல் பழமைவாதிகளையும் பிற்போக்காளர்களையும் ஆத்திரங்-வெறிக் கொள்ளவும் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த சூழலும் நடேசய்யர் மீனாஷியம்மாள் தம்பதிகள் இலங்கை நோக்கி வருவதற்கு ஏதுவான காரணங்களாகவும் அமைந்திருக்கினறன. பாருலேகர் கோதாவரி தம்பதிகள் எற்படுத்திய தாக்கத்துடன் ஒப்பிடுகின்ற போது நடேசய்யர் மீனாஷியம்மாள் தம்பதியினர் ஏற்படுத்தவி;ல்லை என்ற போதினும் பல ஒற்றுமைகள் இவ்விருதம்பதிகளிடமும் இருப்பதனை அவதானிக்கலாம். அக்காலச் சுழல், இயக்கங்களின் வளர்ச்சி, என்பனவும் சமூகப் போராட்டத்தில் தாக்கம் செலுத்தும் என்பதனையும் இவ்விடத்தில் மனங்கொள்ளல் வேண்டும். எனவே இவ்வகையான ஒப்பியல் ஆய்வுகள் செய்யப்படல் வேண்டும். அவை சுவைப் பயப்பதாக மட்டுமன்று பயன்மிக்கதாகவும் அமையும். அத்தகைய ஆய்வினை மேற்ககொள்வது இக்கட்டுரையின் நோக்கமன்று.

கோ.நடேசய்யர் மலையகத்தில் தமது அரசியல் தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்த போது அவருக்கு பக்க பலமாக சிலர் வந்தமைந்தனர். அவ்வாறு அரசியல் தொழிற்சங்க பணிகளில் முழுநேர தெழிலாக கொண்டு செயற்பட்டவர்களில் முதன்மையானவர் மீனாஷியம்மாள்.

மலையக மக்களிடையே அரசியல் தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்ட மீனாஷியம்மாள் தவிக்க முடியாதவகையில் இலக்கிய துறையிலும் பிரவேசித்தார். அரசியல் களத்திலிருந்தே தமது படைப்புகளை பட்டைத்தீட்ட முனைந்துள்ள நாகரிகத்தை அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. மீனாஷியம்மையாருக்கு இவ் ஆற்றல் எங்கிருந்து வந்தது என்பதும் சுவாரசியமானதொரு தேடலாகும். அம்மையாருக்கு ஆரம்ப கால முதலாகவே பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு இருந்து வந்திருக்கின்றது என்பதை அவரது அரசியல் தொழிற்சங்க இலக்கிய செயற்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன.

மலையகத்தில் பாரதியார் பாடலகள் முப்பதுகளின் பிற்பகுதியிலும் நாற்பதுகளின் ஆரம்பத்திலும் பரவத்தெடங்கியிருந்தன. தமிழகதத்தில் தேச பற்று உணர்வு மிக்க சிலர் பிரித்தானிய எதிர்ப்புணர்வக் கொண்டு தேச பக்தி பாடல்களை இசைத்தனர். அவர்கள் பொதுவாகவே பாரதியாரின் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். பாரதியாரின் பாடல்களையோ அல்லது பாரதி பாடல்கள் மெட்டில் தாம் இயற்றிய பாடல்களையோ மக்கள் மத்தியில் பாடி வந்தனர். அத்தகையவர்களில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவா என். என். விஸ்வநாததாஸ். “தேசவிரோத பாடல்களினால் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றவர்” என பிரித்தானிய அரசினால் அடையாளப்படுத்தப்பட்டவர். தமிழக மக்களிடையே பிரபல்யம் அடைந்திருந்த பாஸ்கரதாஸின் பாடல்களை மக்கள் மத்தியில் பரப்பியதில்; விஸ்வநாததாஸிற்கு முக்கிய இடமுண்டு. பாரதியின் பாடல்கள் மற்றும் விடுதலையுணர்வு கூடிய பாடல்கள் இலங்கைக்கு வருகை தந்த யாத்திரிகள் பக்தர்கள் மூலமாக மலையக தோட்டங்களில் பரவியிருந்தன.

1930களுக்கு முன்னர் இலங்கையில் தமிழில்; வெளிவந்த சிறுபத்திரிகைகள் விரல்விட்டு எண்ணக் கூடியவையாகவே காணப்பட்டன. தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த தாகூர், சரோஜினி, பாரதி, நாமகல் கவிஞர் போன்றோர் பாடிவந்த சுதந்திர உணர்வமிக்கப் பாடல்களும் மற்றும் வேதநாயகம்பிள்ளை, சங்கரதாஸ் சுவாமி, உடுமலைக் கவிராயர் முதலானோரின் படைப்புகளும் மலையகத்தில் ஓரளவு வசதியும் வாய்பபும் பெற்றவர்களையே வந்தடைந்தன. மலையக தோட்டத் தொழிளாலர்களை பொறுத்த மட்டில் எழுத்தறிவு மிக குறைவாக காணப்பட்டமையால் இவ்வாக்கப் படைப்புகள் அவர்களை எட்டவில்லை. இதற்கு மாறாக மலையக மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கிய நாட்டர்பாடல்களும் கதைப்பாடல்களுமே அவர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்த சூழலில் மலையக தோட்டத் தொழிலாளர்களிடையே பாரதியின் பாடல்களை மற்றும் விடுதலை உணர்வுமிக்க பாடல்களை கொண்டு சென்றதில் மீனாஷியம்மாளுக்கு முக்கிய இடமுண்டு. ஈழத்தில் மலையக மக்களின் எழுச்சிக்கு இலக்கியத்தை ஊடகமாக பயன்படுத்தி மக்கள் நலன் சார்ந்த அரசியல் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி பெண் ஆளுமையாக திகழ்ந்தவர் மீனாஷியம்மாள் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. ஈழத்து சிறுகதை முன்னோடியாக கோ.நடேசய்யர் திகழ்ந்தது போன்று ஈழத்தின் முதல் பெண் கவிஞர் என்ற பெருமைக்குரியவர் மீனாஷியம்மாள் என்பது ஆய்வாளர்களால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.(செ.யோகராசா ‘ஈழத்து முதல் பெண் கவிஞர்’ என்ற கட்டுரையில் இது குறித்து எழுதியுள்ளார்).

மீனாஷியம்மாளின் செய்பாடு சிந்தனை என்பன மலையக தோட்டத் தொழிலாளர்களை மையமாக கொண்ட அமைந்திருந்தமையால் அவரது கவிதைகளும் மக்களை தழுவியதாக மக்களின் மொழியில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கலை இலக்கியத்தை சமுதாய முரண்பாடுகளின்றும் பிரச்சனைகளிலின்றும் பிரித்துப் பார்த்தவர்கள் கலை இலக்கியத்தை “உயர்தோர் மேற்றே” எனக் கொண்டு இலக்கியத்திலின்றும் பொது மக்களை தூர விலக்கி வைத்தனர். கலை இலக்கியம் யதார்த்ததிற்கு அப்பாற்பட்டது எனவும் கலைஞன் தமது சுய சிந்தனையால் உணர்வால் இலக்கியத்தை சிருஷ்டிக்கின்றான் எனவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்பதை அழகில்வாதிகள் ஆரம்ப முதலாகவே கூறி வந்தள்ளனர்-வருகின்றனர். இதற்கு நேர்மறான கண்ணோட்டமும் உண்டு. கலை இலக்கியம் என்பது மனித வாழ்வில் இருந்து தோன்றி அது மனித வாழ்வை செழுமைப்படுத்துகின்றது. ஆகவே இலக்கியம் என்பது பரந்துப்பட்ட வெகுசனங்களை தழுவியதாக இருப்பதுடன் அம்மக்களுக்கு அவ்விலக்கியம் உணர்த்தி வைக்கும் ஆற்றலினையும் அது பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். இது பற்றி மக்கள் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான பாரதியின் பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது.

”எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் கொள்ளக் கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவிமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷசத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெருக்கும் நன்கு விளங்கும் படி எழுதுவதுடன் காவியத்தினுடைய நயங்கள் குறைப்படாமலும் நடத்துதல் வேண்டும்.”

பொதுமக்கள் சார்பும் ஜனரஞ்சக தன்மையுமே இலக்கியத்தின் உயிர் நாடி எனக் கொண்டு செயற்பட்டவர் பாரதியார். ‘அதாவது இலக்கியச் சிறப்பும் ஜனரஞ்கத் தன்மையும் ஒன்றுக்கொன்று முரணாகவோ, ஒன்றையொன்று விலக்குவதாகவோ இருக்கவேண்டியதில்லை. ஆனால் இலக்கிய உலகில் கடந்த சில காலங்களாக இப்பிளவு இருந்து வருகின்றது. நமது சமுதாயத்திற் கைப்பணிக்கும் கலைக்கும் உடல் உழைப்பாளர்களுக்கும் புத்தி ஜீவிகளுக்கும், பேதமும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதைப் போலவே இதுவும் சமுதாய அமைப்பில் காணப்படும் சிற்சில முரண்பாடுகளின் பிரதிப்பலிப்பேயாகும்.”(கைலாசபதி.க. 1986, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், மக்கள் வெளியீடு, சென்னை.ப.50)

பாரதியில் மீனாஷியம்மாள் முழு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மத்தியதர வர்க்கத்தை சார்ந்த பெண்னொருவர் தமது மரபு சார்ந்த தடைகளையெல்லாம் தகர்த்துக் கொண்டு மக்கள் மத்தியில் தொழிசங்க அரசியல் பணி புரிவதை தமது வாழ்க்கையாக கொண்டு செயற்பட்டமை. தான் தேர்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைக்கு பொருத்தமான கனவரை காதல் திருமணம் கெண்டமை என்பன பாரதி கனவு கண்ட புதுமை பெண்ணாக அம்மையார் வாழ முற்பட்டமை காட்டுகின்றது.

தமது தொழிற்சங்க அரசியல் கூட்டங்களின் போது அம்மையார் பாரதியாரின் பாடல்களை பாடிய பின்னரே அக்கூட்டங்கள் அரம்பிக்கப்பட்டுள்ளதை பல பதிவாக்கியுள்ளனர். அத்துடன் தாம் இயற்றிய பாடல்களையும் மக்கள் மத்தியில் பாடி அவர்களை விழிப்புக் கொள்ளச் செய்துள்ளார். இவ்வாறாக மலையக மக்கள் பற்றியும் பல பாடல்களை இயற்றி மக்கள் மத்தியில் பாடி வந்திருக்கின்றார். “இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை” என்ற தலைப்பில் அவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பை பெண்கள் ஆய்வு வட்டத்தினர் தொகுத்து வெளிட்டுள்ளனர். அம்மையார் பற்றிய ஆய்வுகளுக்கு இத்தொகுப்பு பெரிதும் துணையாக அமைந்துள்ளது. அவர் இயற்றிய பாடல்களில் சிலவற்றினை நோக்குவோம்:

“பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்- அந்நாள்

பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்

தாய்நாடென் றெண்ணி யிருந்தோம்- இவர்கள்

தகாத செய்கைக் கண்டு மனமிக நொந்தோம்”

“சட்டமிருக்குது ஏட்டிலே - நம்மள்

சக்தியிருக்குது கூட்டிலே

பட்டமிருக்குது வஞ்சத்திலே- வெள்ளைப்

பவர் உருக்குது நெஞ்சத்திலே

வேலையிருக்குது நாட்டிலே- உங்கள்

வினையிருக்குது வீட்டிலே…”

மலையக மக்கள் என்போர் எங்கிருந்தோ வந்து தயாராக இருந்த பொருளாதாரத்தை கபளீகரம் செய்துக் கொண்டவர்கள் அல்லர். மாறாக, மலைகளில் மதர்த்து தளர்த்து நிற்கும் தேயிலைச் செடிகள், அவை பலிக் கொண்ட அப்பாவி மக்கள் தான் மலையகத் தொழிலாளர்கள். ஒருப்பறமான காலணித்துவ ஆதிக்கமும் மறுப்பறமான இன அடக்கு முறைகளும் தேசிய சிறுப்பாண்மை என்ற உணர்வை இம்மக்களிடையே வளர்வதற்கு ஏதுவாக அமைந்தன. இந்நாட்டின் அதிகார வர்க்கமும் பேரினவாதிகளும் இம்மக்களை அடிமைக் கூலிகளாக கருதியதுடன் இவர்களின் இனத்தனித்துவத்தை சிதைக்கும் வகையிலான சட்டங்களை கொண்டு வந்தனர்;. இவ்வாறானதோர் சூழலில் அரசியல் தெழிற்சங்க இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்த அம்மையாரின் கவிதைகளில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, தொழிலாளர் ஒற்றுமை, தொழிலாளர் உரிமைகள் என்பன குறித்து தீவீரமாக பாடினார். யாவற்றுக்கும் மேலாக இலங்கையில் பேரிவாதத்தை சாடிய முதல் பெண் அம்மையார் ஆவார். இக்காலப்பகுதில் வட-கிழக்கு சார்ந்த அரசியல் தலைவர்களும் புத்திஐPகளும் இலங்கைத் தேசியம் குறித்து கவனம் செலுத்திருந்தமையினால் பேரினவாதம் குறித்து சிந்திக்க தவறிவிட்டனர். சேர்.பொன். அருணாசலம் போன்றோர் பேரினவாத்தை அடையாளம் கண்டிருந்த போதும் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் இறப்பு நநிகழ்ந்து விடுகின்றது. பின் வந்த தலைவர்கள் அதனை கவனத்திலே எடுக்கவில்லை. உயர் மத்திய தர வர்க்க வாழ்க்கை முறைகள், அரசியல் சிந்தனைகள், அரச சலுகைகள் காரணமாக பேரினவாதம் குறித்து அவர்கள் சிந்திக்க தவறிவிட்டனர். பேரினவாதத்தை அரசியல் தளத்தை சரியாக அடையாளம் கண்டவர்கள் நடேசய்யர் மீனாஷியம்மாள் தம்பதிகளாவார். இந்தப் போக்கினை மீனாஷியம்மாளின் பாடல்களிலும் காணக் கூடியதாக உள்ளது. உதாரணம் தேடி வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. பின்வரும் வரிகள் அதனை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

“சிங்கள மந்திரிகள் செய்திடும் சூழ்ச்சி

சேதியில்லாமல் வேறில்லை காட்சி

பொங்கவே தெழிலாளர் ஒற்றுமை காட்சி

பொலிவு கொண்டடாலவர் அடைகுவர் தாட்சி”

“சிங்கள மத்திரிகள் கூற்று- மிக

சீருகெட்டதென்று சாற்று

சங்கடமே தேரிடுமென தோற்று-திந்திய

சமூகம் நெருப்பாய் வரும் காற்று”

“நன்றிக் கெட்டு பேசும் மந்திரிமாரே-உங்கள்

நியாயமென்ன சொல்லும்வீரே

இன்றியமையாதவொரு பேரே செய்ய

இடமுண்டாக்ககின்றீர் நீரே”

அந்தவகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் பேரினவாதத்திற்கு எதிரான பார்வையை அரசியல் தளத்திலிருந்து முதன் முதலில் முன்னெடுத்தவர்கள் நடேசய்யர் மீனாஷியம்மாள் தம்பதிகளாவார்.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த பார்வையும் முக்கியமானது. மலையக இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்கின்ற சி.வியின் முக்கிய படைப்பு “In Ceylon Tea Garden” என்ற கவிதை தொகுப்பாகும். 1948களில் மலையக மக்களின் வாக்குரிமைப் பறிக்கப் பட்ட போது அத்தகைய ஜீவகாருணியமற்ற செயலுக்கெதிராக இலங்கை இந்திய காங்கிரஸ் சத்தியாகிர போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்தது. அச்சத்தி;யாகிரக போராட்டத்தில் சி.வியும் கலந்துக் கொண்டார். அப்போராட்டம் ஏற்படுத்திய உந்துதலினால் பிரவாகம் கொண்டதே மேற்குறித்த கவிதைத் தொகுப்பாகும். மலையக மக்களின் வாழ்வு, இருப்பு என்பன குறித்து அக் கவிதைத் தொகுப்பு அழகுற வெளிக் கொணர்கின்றது. அதேசமயம், மலையக மக்களின் வாக்குரிமைப் பறிப்பு தொடர்பாகவோ அல்லது சத்தியாகிரக போராட்டம் தொடர்பாவோ எந்த பதிவும் அக்கவிதைத் தொகுப்பில் அடங்கியி;ருகாதது துரதிஸ்டவசமானதொன்றாகும். ஆனால் மீனாஷியம்மாளை பொறுத்த மட்டில் மலையக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் சட்டங்களையும் நேரடியாக சாடுகின்றார். தமது பாடல் தொகுப்பின் முன்னுரையில் அவரி பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது.

“இலங்கைவாழ் இந்தியர்களின் நிலைமை வரவர மிசவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கைவாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீரமுடன் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்திய மக்களுக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்தை உணர்த்தி அவர்களிடையே அதிலும் முக்கியமாக இந்திய தோட்டத் தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அத்தகைய பிரசாரம் பாட்டுக்கள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையை பாட்டுக்களின் மூலம் எடுத்துக் கூற மன் வந்துள்ளேன். இந்தியர்களைத் தூக்கத்தில் ஆழ்ந்து விடாது தங்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்குத் தீவிரமாக போராடும் அவர்களை இப்பாட்டுகள் தட்டியெழுப்பும் என்பதே என் அவா.”

அம்மையாரின் பாடல்கள் தொழிலாளர்களை சார்ந்ததாகவும் அவர்களை விடுதலை உணர்வுக் கொள்ள வைப்பதாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் சி.விக்கு வந்தமையாத ஆற்றல் மீனாஷி அம்மாளுக்கு வாய்க்கப் பெற்றுள்ளமை திருக்கிட வைக்கும் அளவுக்கு அவரது அரசியல் தொழிற்சங்க இலக்கிய செயற்பாடுகளுக்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. அம்மையாரின் பாடல்கள் பொதுவாகவே கூத்து மெட்டுகளிலும், சினிமா பாடல் மெட்டுகளிம் அமைந்துள்ளன. அம்மையாரே தமது பாடல்களுக்கான மெட்டுகளையும் தமது நூலில் தந்துள்ளார்(ஜெ மாயாவதாரனே, சந்திர சூரியர், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஆடுபாம்பே, அய்யா ஒரு சேதி கேளுNமு, தங்க குடமெடுத்து, கும்மி, கல்லார்க்கும் கற்றவர்க்கும், அய்யோ ஈதென்ன அநியாயம், போன் பாடல் மெட்டுகளை எவ்வொரு பாடலும் தொடங்குவதற்கு முன் குறிப்பிடுகின்றார்). இவ்வாறு தமது கவிதையில் இசை மெட்டு என்னும் உத்தியை கையாண்டுள்ள அம்மையாரின் கவிதைகள் பாரதியின் நவீன உத்திகளை அடிபடையாக கொண்டமைந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது. அம்மையாரின் பாடல்களை பாரதியாரின் பாடல்களோடு ஒப்பு நோக்குகின்ற போது பொருளமைதி, சொற்கள் என்பனவற்றில் பெரிதும் ஒற்றுமையிருப்பதனைக் காணலாம். ஒருவகையில் பாரதியாரின் பாடல்களை மலையக சூழலுக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்ததாகவும் அவரது பாடல்கள் அமைந்துள்ளன. பராசக்தியை, பாரதNவியை வணங்குகின்ற போதும், இடம்பெறுகின்ற சொற்களான “செய்வோம்”, “நடப்போம்”, “கொண்டாடுவோம்” முதலிய போர்க்குணமுள்ள சொற்கள் இருவரின் கவிதைகளிலும் தராளமாக இடம்பெறுவதைக் காணலாம்.

மலையகத்தில் தொழிலாளர் வர்க்கம் சார்ந்த அரசியல் தொழிற்சங்க பணிகளையும் அவர் தம் நலனுக்கான போராட்டங்களையும் முன்னெடுத்ததில் பிரஸ்கெடிலுக்கு முக்கிய இடமுண்டு. உழகை;கும் மக்கள் சார்ந்த அவரது செயற்பாடுகளும் அமைப்பாக்கப் பணிகளும் வெள்ளை துரைமார்களையும் ஏகாதிபத்தியவாதிகளையும் ஆத்திரங்கொள்ளச் செய்தது. இதன் காரணமாக பிரஸ்கெடில் தமது துரை(தோட்ட முகாமையாளர்) பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவும் இலங்கை அரசாங்கத்தால் பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறானதோர் சூழலில் தெழிலாளர் நலன் சார்ந்த பணிகளிலும் அமைப்பாக்கப் பணிகளிலும் முழு ஈடுப்பாட்டன் செயற்பட்டு வந்த பிரஸ்கெடில்(Bracegirdle) மற்றும் என்.எம். பெரேரா, கொல்வின். ஆர். டி. சில்வா போன்ற இடதுசாரி தலைவர்களுடனும் ஐக்கியப்பட்டு மீனாஷியம்மையார் செயற்பட்டுள்ளார். இவர்கள் ஒழுங்கமைத்திருந்த கூட்டங்களில் கலந்து உரை நிகழ்திய நிகழ்வுகள் தன்முனைப்பற்ற அவரது நாகரிகத்தை மட்டுமன்று பெண்மைக்கே உரித்தான கம்பீரத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. அம்மையாரின் ஒட்டு மொத்தமாக ஆளுமையை மதிப்பீடு செய்த கலாநிதி என். எம். பெரேரா

“இலங்கையில் இந்தியர்களுக்காக அநீதிகள் இழைக்கப்படுமானால் அந்த அநீதிக்கு எதிராகப் போராடும் போராளிகளின் முன் வரிசையில் திருமதி மீனாஷி அம்மையாரைக் காணலாம்.” என மிகப் பொருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சமூகத்தை புரிந்துக் கொள்ளாமல் அச்சமூகம் சார்ந்த விடுதலையை தோற்றுவிக்க முடியாது என்பது வரலாற்றின் நியதி. மார்க்சியம் அதன் தோற்றக் கால முதலாகவே சகலவிதமான ஒடுக்கு முறைக்கும் எதிரான தத்ததுவார்த்த தளத்தினை வழங்கி வந்திருக்கின்றது. துரதிஸ்டவசமாக இந்தியா இலங்கை முதலான நாடுகளில் மார்க்சியத்தை இயக்க செயற்பாடுகளாக முன்னெடுத்தவர்கள் இரசிய, சீன மாதிரிகளை பிரதிப்பண்ணவே தலைப்ப்டடனர். தெளிவாக கூறின் இவர்கள் இரசிய சீன புரட்சியை நிகழ்த்திக் காட்ட முனைந்தனரே தவிர இலங்கை இந்திய புரட்சிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறி விட்டனர். இந்தசூழலில் மார்க்சியத்தை காலவாதியான தத்துவமாக காட்ட முனைந்த சிலர் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் ஆசிர்வாதத்துடன் பல குழப்பகரமான சிந்தனைகளை மக்கள் மத்தியில் முன் வைத்து அவர்களின் சமூமாற்றத்திற்கான செயற்பாடுகளையும் இயக்கங்களையும் இல்தொழிக்கத் தலைப்பட்டனர். இந்தப் பின்னணியில் தான் மார்க்சியம் பெண்விடுதலை சார்ந்த சிந்தனைகளை முன் வைக்க தவறி விட்டது என்ற பிரச்சாரத்தை நவீன பெண்ணியவாதிகளும் மார்க்சிய எதிர்ப்பு அறிவுஜீவகளும் முன்னெடுத்தனர். மார்க்சியத்தை கோராமல், மார்க்சிய வழி அல்லாமல் எந்த வகையிலும் பெண் விடுதலையை முன்னெடுக்க முடியாது என்பதை வரலாறு நிருப்பித்திருக்கின்றது. மீனாஷியம்மாளை பொருத்தமட்டில் பெண்களை சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் பங்குபற்றச் செய்ததுடன் பெண்விடுதலையின் தேவையை சமூகவிடுதலையுடன் இணைததே முன்னெடுத்தார்.

டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட விவாதத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு எதிரான கருத்துக்கள் சேர். பொன். இராமநாதன் முதலானோரால் முன்வைக்கப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பெண்கள் வாக்குரிமைச் சங்கம் என்ற அமைப்பு லேடி டயஸ் பண்டாரநாயக்காவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பில் சார்ந்த திருமதி. நல்லம்மாள் சத்தியவாகீஸ் வர ஐயர்> திருமதி ஈ.ஆர். தம்பி முத்து முதலிய தமிழ் பெண்கள் அங்கம் வகித்தனர். மீனாஷி அம்மையாரைப் பொறுத்தமட்டில் இவ்வமைப்பில் அங்கத்துவம் பெறவில்லை என்ற போதினும் பெண்களின் வாக்குரிமையை ஆதரித்து பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இச் சங்கம் குறித்த அம்மையாரின் பார்வை இவ்வாறு அமைந்திருந்தது.“இச்சங்கமானது டொனமூர் கமிஷன் இலங்கைக்கு வந்த காலத்தில் ஆரம்பிக்கப் பெற்றதெனினும் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். ஏன்று தான் சொல்ல வேண்டும். இச.சங்கத்தினர் இதுவரை செய்துள்ள வேலை எப்படியிருந்த போதிலும் இனிதான் அதிக வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேற்படி சங்கத்திற்கு வருஷ சந்தா ரூபா 50 ஆக வைத்திருக்கின்றபடியால் சதாரணகுடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில் சேர்ந்துழைக்க வகதியிராது. புணம் படைத்தவர்கள் மாத்திரம் தங்கள் காரியத்தை செய்து முடிப்பது போதுமானதாகாது. எல்லா சகோதரிகளும் கலந்துழைக்க வேண்டிய வேளையில் பணம் படைத்தவர்வர்கள் மாத்திரம் தலையிடுவதைக் கொண்டு அதிக பலன் கிடையாது. ஆகவே சகோதரிகள் தாங்கள் கொண்ட காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால் ஆங்கிலம் தெரியாத சகோதரிகளிடத்தும் பிரச்சார வேலைகளை துவக்க வேண்டும்”

என தேசபக்தன் (26-01-1929) பத்திரிக்கையில் எழுதியுள்ளார். பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதுடன், அவ்வியக்கம் உழகை;கும் மக்களிருந்தும் அவர்களின் நலனின்றும் எந்தளவு அந்நியய்பட்டிருந்தத என்பதனையும் அம்மையார் சுட்டிக்காட்டத்தவறவில்லை. இவ்வியக்கத்தின் சிந்தாந்த தளம், செயற்பாடு என்பன அம்மையாரின் சிந்தாந்த தளம் நடைமுறை என்பனவற்றிலிருந்து முரண்பட்டிருந்தமையும் அவர் இவ்வியக்கத்தில் அங்கம் வகிக்காதற்கு ஏதுவான காரணமாக அமைந்திருக்கும் என எண்ணத்தோன்றுகின்றது. இவ்வாறே பெண்களுக்கு வாக்குரிமை வழுங்குவதை கடுமையாக எதிர்த்த சேர். பொன்.இராமநாதன் போன்றோரை கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்துகின்ற அதே சமயம் பெண் ஆளுமையின் மகத்துவம் குறித்து சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றார்.

1929 ஆண்டில் தேசபக்தன் பத்திரிக்கை தினசரியாக வெளிவரத் தொடங்கியது. நடேசய்யரின் அரசியல் தொழிற்சங்க பொறுப்பு அதிகரித்தால் அவர் அடிக்கடி வெளிய+ர் சென்று வந்ததார். இதன் காரணமாக பத்திரிக்கை பெறுப்பினை ஏற்க வேண்டிய நிலை அம்மையாருக்கு ஏற்பட்டது. அம்மையார் இப்பொறுப்பினை ஏற்று செயற்பட்ட காலத்தில் அதிகமான பெண்கள் இவரோடு இணைந்து செயற்ப்படடமை பற்றி சாரல் நாடன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இக்காலத்தில் தேசபக்தன் பத்திரிக்கையில் அம்மையார் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். சில பத்திரிகைகளுக்கு ஆசிரியர் தலையங்கமும் எழுதியுள்ளார். “ஸ்த்திரி பக்கம்” என்ற பகுதிக்கு தானே பொறுப்பாவிருந்து பெண்கள் தொடர்பில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மலையகத்தில் மீனாஷியம்மாள் அதன் சமூக வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பினை நல்கியுள்ளார். அம்மையாரின் ஒருமுகப்படுத்தப்பட்ட மக்கட்சார்பு, நாட்டு நல நாட்டம், இலக்கிய நோக்கு என்பன மலையகத்தில் புதிய மரபொன்றினைத் தோற்றுவித்திருக்கின்றது. அம்மரபு இன்றைக்கும் வாய்ப்புள்ள சில ஆக்கக் கூறுகளைக் கொண்டுள்ளது. அம்மரபின் வரலாற்றினையும் தொடர்ச்சியினையும் நன்கு விளங்கிக் கொள்வதற்கு மீனாஷியம்மாள் பற்றிய முழு நிறைவாக ஆய்வு அவசியமாகும்.

1 comment:

  1. மிக சிறப்பான பதிவுகள். முடியுமாயின் மீனாட்சியம்மாளின் கட்டுரைகளை தொகுத்து வெளிடவும். அத்துடன் மீனாட்சியம்மாளின் பன்முக ஆளுமைகள் வெளிக் காணரப்பட வேண்டும்.

    ReplyDelete