Sunday, June 26, 2011

டொமினிக் ஜீவாவின் 85 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்

ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக திகழ்கின்ற தோழர் டொமினிக் ஜீவாவின் 85 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முச்சந்தி இலக்கிய வட்ட நண்பர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மல்லிகை என்ற முற்போக்கு சஞ்சிகையை வெற்றி கரமாக நடத்திவருவதுடன், முற்போக்கு மார்க்சிய உணவுக் கொண்ட பல தளிர்கள் கிளையாவதற்கும் வேர்கொள்வதற்கும் தூண்டுதலாக இருந்து வருபவர் டொமினிக் ஜீவா.
எமது யாசிப்பு அவர் தொடந்து இந்த மானுட அணி சார்ந்து காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும்.

லெனின் மதிவானம்
முச்சந்தி இலக்கிய வட்டம்


2 comments:

  1. இனிய நல் வாழ்த்துகள். சகோதரர் ஆரோக்கியமாக மகிழ்வுடன் நீடு வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மல்லிகை இதழை எனது நண்பர் பணம் கொடுத்து, எனக்கு தபாலில் அனுப்பக் கேட்டது நிறைவேற்றுப்படவில்லை. இன்றும் புரியாத புதிராகவே உள்ளது...அவர்கள் நிலைப்பாடு.மெயிலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தாமதமாக வரும் வாழ்த்துக்களையும்,வணக்கங்களையும் இலக்கியப்போராளியின் காலடியில் சமர்ப்பியுங்கள்.

    ReplyDelete