Tuesday, June 28, 2011

இங்கிவரை யான் பெறவே.....! என்ன தவம் செய்தேனோ லெனின் மதிவானம்

(மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் 85 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு எழுந்த நினைவுகள்)கடந்த வாரம் (27-06-2011) டொமினிக் ஜீவாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நண்பர்கள் தமது அனுபவ பகிர்வு கலந்துரையாடலொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சி கொழும்புத் தமிழ் சங்கத்தில் தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு தனபாலசிங்கத்தின் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட பலர் டொமினிக் ஜீவா பொறுத்து தமது உணர்வுகளை பகிர்ந்துக் கொண்டனர். இறுதியாக பதிலுரை வழங்கிய டொமினிக் ஜீவா இந்நிகழ்விற்கு சிகரம் வைத்தால் போல மல்லிகை சஞ்சிகையை வளர்த்தெடுப்பதில் தான் சந்தித்த போராட்டங்கள், சவால்கள் கூடவே தான் அதனை எதிர்க் கொண்ட விதம் குறித்து பேசியதுடன் எதிகாலத்தின் மீதான தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.கூட்டத்தில் கலந்துக் கொண்டோரும் கருத்துரை வழங்கியோரும் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் மல்லிகையுடன் தொடர்புக் கொண்டவர்களே. ஆத்தகைய உறவுகளில் ஒருவாராகவே நானும் அந் நிகழ்வில் கலந்துக் கொண்டேன். ஜீவாவின் 85 ஆவது பிறந்த வாழ்த்துகளை தெரிவித்த போது எனது நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்று நிலைக்கின்றது. அந்த நினைவுகளை பதிவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.ஹட்டனிலே நான் கல்லூரி மாணவனாக இருந்த வேளையில், எனது விட்டு அலுமாரியிலிருந்த ஜீவாவின் ‘பாதுகை’ என்ற சிறுகதை தொகுப்பும் மல்லிகை ஜீவா மணிவிழா மலரும் எதிபராதவிதமாக என் கண்ணில் பட்டன. பாதுகை சிறுகதை தொகுப்பின் அட்டைப்படம் செருப்பு தைக்கும் தொழிலாளியின் படத்தை அதற்கே உரித்தான நாகரிகத்துடன் பிரசுரித்திருந்தமை இயல்பாகவே என்னை கவர்ந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அந்தக் காலத்தில் ஜீவாவையோ அல்லது அவரது படைப்புகளையோ ஒரளவிற்கேனும் அறிந்து வைத்திருந்தேன் எனக் கூறுவதற்கில்லை. எழுத்துலகில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் தான் டொமினிக் ஜீவாவைப் பற்றியும் மல்pலகை சஞ்சிகையைப் பற்றியும் ஒரளவிற்கு அறிந்துக் கொண்டேன். 90களின் ஆரம்பத்தில் (திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) பேராசிரியர் கைலாசபதி பற்றிய கட்டுரையொன்றினை எழுதுவதற்காக மல்லிகை பந்தல் வெளியிட்;ட கைலாசபதி நினைவு மலரை பெறுவதற்காக  யாழ்பாணத்தில் இருந்த மல்லிகை முகவரிக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தேன்.என்ன ஆச்சரியம்.! ஒரு வாரத்திற்குள் அந்த நூல்கள் எனக்கு கிடைத்தது. கூடவே ஜீவாவின் கையெழுத்தில் மிக சிறிய கடிதம். அன்றைய இலக்கிய உலகினை ஓரளவிற்கு நான் அறிவேன். பாலியல் ஏக்கங்களும் வெத்து வேட்டுகளும் பத்திரிகை உலகை ஆக்கிரமித்து நிற்க, மறுப்புறத்தில் ஒவ்வொரு தலைமுறைக்காகவும் சேகரித்து வைத்த நாகரிகங்கள் அனைத்தையுமே இந்நாட்டின் மானுடம் இழந்து அம்மனமாகி இருக்கும் ஓர் காலக்கட்ட ஆர்பரிப்பில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தமது தேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு காலக் கட்டத்தில், சமகால போராட்டத்திலிருந்து விலகி நூலகசாலைக்குள்ளும் பரிசோதனை அறைக்குள்ளும் இருந்துக் கொண்டு புரட்சி குறித்த அவதூறுகளை பேசும் சிறு முதலாளித்துவ பண்பு இலங்கைக்கு மட்டும் உரித்தானதல்ல. மக்கள் சார்பான தத்துவங்களையும் இலக்கணங்களையும் இவர்கள் தமது சுயநலத்தின் பேரில் தமக்கேற்றவகையில் மாற்றியமைக்க முனைகின்றார்கள். “ஒரே மூச்சில் புரட்சி அல்லது வீழ்ச்சி”

என கூப்பாடு எழுப்பும் இக் கனவான்களை தான் லெனின் புரட்சிகர வாய்ச் சொல் வீரர்கள் என விமர்சிக்கின்றார். இத்தகைய சந்தர்ப்பவாதிகளால் புரட்சி எவ்வாறு காட்டிக் கொடுக்கப்படுகின்றது என்பதை வரலாறு எமக்கு உணர்த்தியிருக்கின்றது. பலுவானவற்றை ஏனையோருக்கு தள்ளிவிட்டு இலகுவானதை மாத்திரம் இவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் சிறிதளவு ஏதேனும் சாதித்து விட்டாலும் மக்கள் மத்தில் தம்பட்டம் அடிப்பவர்கள். ஓரளவு சமூகவியல் நூல்களை கற்றிந்த போதே என்னால் இதனை இனங்கான முடிந்திருந்தது.இவ்வாறான சூழலில் ஈழத்து இலக்கியத்தில் முற்போக்கு சிந்தனைத் தொழிப்பாட்டினை ஆதாரமாக கொண்டு முகிழ்ந்த இதழாக மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியரும் முத்த படைப்பாளியுமாகிய டொமினிக் ஜீவா என்னை மதித்து எனக்கான நம்மிக்கையை தந்தது. சமூகம் குறித்து சிந்திப்பதற்கும் அது தொடர்பான இயங்காற்றலை சாத்தியப்படுத்துவதற்குமான புதிய ரத்தத்தை என்னுள் பாய்ச்சியது என்பதை நான் நன்றியுடன் கூறிக் கொள்கின்றேன். அன்றைய தினம் மூன்று நான்கு தடவைகள் ஹட்டன் நகரைச் சுற்றி வந்ததாக ஞாபகம்.அன்று ஏற்பட்ட எமது உறவு இன்றுவரை பலவிதங்களில் பலமடைந்து வந்திருக்கின்றது. நான் வாசித்ததை விட எழுதியது குறைவு. தொடர்ந்து மல்லிகை சஞ்சிகையையும் மல்லிகைப் பந்தல் வெளியிடயீடுகளையும் வாசித்து வருகின்றேன். உலக சமுதாயத்தில் நீதியை நிலை நாட்ட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் மனித வர்க்கத்தின் நல்வாழ்வுக்கு பாடுபட, சகல போக போக்கியங்களையும் துறந்து, யாதொரு கர்வமும் கொள்ளாது தியாக வாழ்க்கையை மேற்கொள்வது தான் நாகரிகமிக்க மனிதர்களின் கடமை. இந்த நாகரிகம் டொமினிக் ஜீவாவில் முழுமையாகவே குடிகொண்டிருக்கின்றது.ஜீவாவுடன் முதல் சந்திப்பு எப்போது நடந்தது என்பத ஞாபகத்தில் இல்லை. கொழும்பு நகரத்தின் ஒரு கோடியில் உள்ள கதிரேசன் வீதியில் உள்ள மாதா கேயிலுக்கு அருகில் மல்லிகை பந்தல் என்ற போர்ட்டுன் காட்சியளிக்கும் அந்த நுளைவாயிலின் வழியாக சென்று பலகையால் அமைக்கப்பட்ட படிகளில் மேலேறிச் சென்றால் மல்லிகை அலுவலகத்திற்கு செல்லலாம். அவ்வலுவலகத்தில் தான் நான் முதன் முதலாக ஜீவாவை சந்தித்தேன். அவர் சாதாரணமானதொரு மனிதராகவே காட்சியளித்தார். தாயின் கரிசனையுடன் என்னை வரவேற்று இலக்கியம் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். சொந்த விவகாரங்களோ அல்லது நேரத்தை வீனடிக்கும் வெட்டிப் பேச்சுகளோ அல்லது யாரையும் பற்றி தனிமனித வசைப்பாடல்களோ அவரது கலந்துரையாடலில் இருக்கவில்லை. அவர் பேசும் போது அக்கருத்துக்கள் அடிமனதிலிருந்து எழுந்து வருவதனைக் காணக் கூடியதாக இருந்தது. அநீதிக்கு எதிராக தர்மாவேசம் அவரது பேச்சில் வெளிப்பட்டது. அவரருடனான உரையாடல்கள் எப்போதும் என்னில் விரக்தியையோ நிராசையையோ தோற்றுவிக்கவில்லை. மாறாக என்னை எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்ளச் செய்ததுடன் ஆக்கப்ப+ர்வமான செயற்பாடுகளுக்கான உந்துதலைத் தருவதாக இருந்தது.இதே காலப்பகுதியில் எனது வாசிப்பு ஆர்வம் அதிகரித்து வந்தது. என்னை கோட்பாட்டுத் தளத்தில் வளத்தெடுப்தில் திரு. ந. இரவீந்திரனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இரவீந்திரன் தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனான ஜக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதில் முக்கிய கவனமெடுத்திருந்தார். அவர் ஜீவா பொறுத்து நன்மதிப்பு கொண்டவராக இருந்தார். இந்த சூழலும் ஜீவா மீது நான் வைத்திருந்த மரியாதையை அதிகரித்திருந்தது. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்த காலச் சூழலில் எனது எழுத்துக்கள் ஜீவாவின் கருத்துக்களுடன் நேசப்பர்வமாக முரண்பாடுகளை கொண்டிருந்தது. குறிப்பாக டானியல், கைலாசபதி குறித்த ஆய்வுகளில் நான் மொஸ்கோ தரப்பை விமர்சித்தும் சீனசார்பை ஆதரித்தும் கட்டுரைகளை எழுதியிருந்தேன். இக்கட்டுரைகளை ஜீவர் மிக நேர்மையாக, எவ்வித மாற்றமும் இன்றி

அக்கட்டுரைகளை மல்லிகையில் பிரசுரித்தார். நூன் சார்ந்திருந்த அணியில் பல சந்தர்ப்ங்களில் ஒரு சஞ்சிகை ஆசிரியர் கட்டுரையில் ஏதோ ஒன்றில் கை வைக்க வேண்டும் என்ற மனப்பிறழ்வில் முக்கியமான பகுதிகளை கூட வெட்டியள்ளனர். பல கட்டுரைகள் இருட்டியடிப்பு செய்யப்பட்டன. பல தடவைகள் என்னிடம் கட்டுரை எழுதபடி கேட்ட போது பல வேலைப்ழுவுக்கு மத்தியில் எழுதிக் கொடுத்துள்ளேன். அவை பிரசுாித்த பின்னர் கூட குறித்த புரட்சியின் புனிதருக்கு அடிமாட்டு வேலை செய்யவில்லை என்பதற்காக அவற்றை நூலிருந்து அகற்றிய பின்னர் விநியோகம் செய்தனர். இத்தகைய கேவலமான நாகாரீகத்தின் பின்னணியில் இந்நிலையில் ஜீவாவின் பத்திரிக்கை நாகரிகம் ஓர் முதிர்ச்சியடைந்த பத்திரிக்கையாளனுக்குரியதாகவே எனக்கு படுகின்றது.இன்னொரு நிகழ்வையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1990 களின் ஆரம்பத்தில் கொந்தளிப்பு சஞ்சிகை ஆசிரியர் குழுவினர்-குறிப்பாக மோகன் சுப்பிரமணியம், மு.நேசமணி ஆகியோர் ஜீவாவுடனான இலக்கிய சந்திப்பையும் “மல்லிகை முகங்கள் நூல் வெளியீட்டு நிகச்சியையும் ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் நூல் பற்றிய கருத்துரை வழங்குவதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஈழத்து இலக்கிய வரலாற்றில் மல்லிகை சஞ்சிகையின் முக்கியத்துவத்தையும் ஈழத்துப் படைப்பாளிகளை மையமாக கொண்டு வெளிவந்த அட்டைப்படங்கள் மற்றும் அவை தொடர்பான அறிமுகங்கள் குறித்தும் உரையாடிய நான் மல்லிகை சஞ்சிகையில் இதுவரைக்காலமும் சமூகமாற்றப் போராட்டத்தில் அதன் போர்முகமாய் வெளிப்படட சுபத்திரன், பசுபதி முதலானோரை பிரசுரிக்காது தொடர்பில் எனது விமர்சத்தையும் முன் வைத்தேன். ஜீவா தமது உரையில் மிக மிக நிதானமாக மல்லிகை சஞ்சிகையை நடாத்தி வந்ததில் தான் பெற்ற அனுபவங்கள் எதிகாலத்தில் மேற்கொள்ள உள்ள விடயங்களை எடுத்து கூறியதுடன் இறுதியாக மலையக இலக்கியம் பற்றிக் கூறுகின்ற போது இன்று மலையகம் கைலாசபதி போன்று வளரக் கூடிய ஆய்வாளனைப் பெற்றிருக்கின்றது என என் பற்றி கூறினார். இச் கூற்று பலருக்கு மகிழ்வையும் சிலருக்கு ஆத்திரத்தையும் தோற்றுவித்தது. அதில் ஒரு பத்திரிக்கை நிருபர் அச்செய்தியை பத்திரிக்கையில் பிரசுரிக்காதது மாத்திமல்ல என்பற்றி தனிமனித அவதூறுகளையுமத் பரப்பி சென்றார். இவ்வசைப்பாடுதலில் மார்க்சியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் நண்பரும் இணைந்துக் கொண்டார் என்பத இன்னொரு வேடிக்கையாக விடயம். இந் நிகழ்வு எனக்கு வேதனை தரும் விடமாகவே இருந்தது.இவ்விடத்தி மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டி விடயம் என்னவென்றால் ஜீவா என்னை கைலாசபதியை போன்று வளரக் கூடிய ஒருவர் என்க கூறியது மிகைக் கூற்றாக இருப்பினும் மலையக சமூகம் பற்றியும் அதில் வளரக் கூடிய இளந்தளமுறையினர் குறித்தும் ஜீவா கொண்டிருந்த அக்கரையையே இது எடுத்துக் காட்டுகின்றது. உண்மையில் எனது ஆக்கங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து என்னை வளர்த்தெடுத்ததில் மல்லிகைக்கும் ஜீவாவுக்கும் முக்கிய இடமுண்டு. அந்தவகையில் என்னை காணுகின்ற போதெல்லாம் சமூகதளத்தில் எழுத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி எடுத்துக் கூறுவதுடன் உரிமையுடன் என் எழுத்துக்கள் பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் விமர்சனங்களை முன்வைப்பார்.எனது எழுத்தில் மாத்திரமன்று எனது தனிப்பட்ட வாழ்கையிலும் கூட ஜீவா பெரும் ஆதர்சனமாக இருந்திருக்கின்றார். எனது திருமணத்திற்கான அழைப்பிதழை நான் அவரிடம் கையளித்த போது முடிந்தவரiயில் வருவதாக கூறினார். அவரை எப்படியும் அழைத்து வருவதாக ப+பாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதர்சிங் உறுதியளித்திருந்தார். திருமணத்திற்கான ஆயத்தங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்க மனமகன் கோலத்தில் நான் மண்டபத்திற்குள் சென்ற போது வாசற்படியிலிருந்து என்னை வரவேற்றவர் ஜீவாதான். அவருடன் ந. இரவீந்திரன், ஸ்ரீதர்சிங் , மாத்தளை வடிவேலன் ஆகியோர் இருந்தனர். உண்மையை சொல்லப் போனால் அன்று தான் என் எழுத்தின் வலிமையை உணர்ந்தேன். என் வாழ்நாளில் நான் ஒருப்போதும் அடையாத மகிழ்ச்சியை அங்கிகாரத்தை ஜீவா என் திருமணத்தில் கலந்து வாழ்த்திய நிகழ்வு தந்தது.ஐPவாவின் முக்கிய நாகரிகங்களில் ஒன்றுதான் கலை இலக்கியம் பற்றிய தனது இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதவகையில் சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் அவர் கொண்டுள்ள ஐக்கியமாகும். நண்பன் யார்? எதிரி யார் என்பது தொடர்பில் பல நண்பர்கள் ஜீவா பற்றி விமர்சனங்களை முன்வைக்கின்றனர்;. இவ்விமர்சனம் ஜீவாவுக்கு முற்று முழுதாக பொருந்தாது என்ற போதினும் இவ்விமர்சனத்தையும் ஜீவா கவனத்தில் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

85 ஆவது வயதை அடைந்து விட்ட ஜீவாவின் பன்முகப்பட்ட ஆளுமையை வெளிக் கொணரும் வகையிலான ஆய்வுகள் வெளிவரவேண்டியது அவசியமாகும்.

எமது யாசிப்பு, ஜீவா எமக்காக தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே .

2 comments:

 1. ஜீவா பற்றிய நல்லகருத்து.மறைமுகமாக சொன்னவற்றை வெளிப்படையாக
  கூறியிருக்கவேண்டும்.அப்போதான் அந்த முகங்களைஅறிய முடியும்.சிலருக்கு
  தங்களை புகழாது வேறுயாரையும் புகழ்ந்தால்பிடிக்காது.கொக்கரித்துகொண்டு
  திரிவார்கள்.இதற்குள் இடதுசா(றி)ரி எனச்சொல்வார்கள்.ஜீவா என்பவர் தன்
  முயற்சியால்முன்னேவந்தவர்.என்றும் இவர் நல்ல இடதுசாரி.

  ReplyDelete
 2. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. யதார்த்தம் எம்மை ஆதரிக்கின்றது. ஓர் இலக்கிய போக்கை சுட்டிக் காட்டவே அதனைக் குறிப்பிட்டேன். தனிநபர்கள் பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை. ஒருவிதத்தில் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். தனக்கும் நட்டத்தை ஏற்படுத்தி சமுதாயத்திற்கும் நட்டத்தை ஏற்படுத்துபவர்கள். யதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப எமது வேலைத்திட்டங்களை அமைத்து, நமது குறிக்கோளை அடைய ஒற்றுமையுடனும் உறுதியுடனும் முன்னேறுவோம்.
  லெனின் மதிவானம்

  ReplyDelete

There was an error in this gadget