Monday, August 8, 2011

கதிர் காமு கிருஸ்ணபிள்ளை (மாயக்கை கிருஸ்ணபிள்ளை) காலமானார்

தகவல்- மேமன்கவி

கதிர் காமு கிருஸ்ணபிள்ளை (மாயக்கை கிருஸ்ணபிள்ளை)27.07.2010 அன்று தொண்டமாற்றில் காலமானார்.
இச்செய்தியினை எனக்கு எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் அறிவித்தார். அவரை பற்றி மேலும் அக்குறிப்பில் நந்தினி சேவியர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘’சாதி ஒடுக்கு முறையால் பின்தள்ளப்பட்ட வடமாராச்சியின் கிராமங்களில் ஒன்றான மாயக்கையின் முக்கிய மனிதராக கிருஸ்ணபிள்ளை இருந்திருக்கிறார். (எனது ‘அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதையில் அக்கிராமத்தை அடையாளப்படுத்தியிருக்கிறேன்.)

அவரை நான் அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலையில் ஒரு ஆசிரியராக அடையாளம் கண்டேன். இன்னொரு கிருஸ்ணபிள்ளை அங்கு ஆசிரியராக இருந்தமையால், இவர் ‘மாயக்கை கிருஸணபிள்ளை’ யென ஊர்ப் பெயரால் அழைக்கப்பட்டார். பாரதியாரின் தலைப்பாகை கட்டுடன் கம்பீரமாக சைக்கிளில் வருவது எனக்குத் தெரியும். கவிஞர் அல்வாய் மு.செல்லையா வுடன் கவியரங்குகளில் அவர் கவிதை பாடியதை நான் அறிவேன். பின் நாட்களில் திருமண பந்தத்தினால் தொண்டமனாறு வாசியாகினார்.

தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட நாட்களில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிட்டியது. எல்.ரி.என் நாகரத்தினத்திற்கு பின்னர் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தலைவராக அவர் இருந்தார். எழுத்தாளர். கே.டானியலுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் ஒரு இடதுசாரியாக இல்லாதிருந்த பொழுதும், சாதியத்துக்கெதிரான போராட்டங்களில் முன்னணி பங்காளாராக முழு மனதுடன் ஈடுபட்டார். சாதி ரீதியான ஒடுக்கு முறைகளை அனுபவித்த தன் வெளிப்பாடே அவரை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் பால் ஈர்த்தது. என்பது மறக்க முடியா உண்மை. சாதியம் மீண்டும் தலை தூக்க விளையும் இந்த நேரத்தில் அவரது இழப்பு மிக வருத்தத்துகுரியது. அவருக்கு எம் தோழமை நிறைந்த அஞ்சலிகள்’’

முச்சந்தி இலக்கிய வட்ட நண்பர்களும் இவ் அஞ்சலியில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.





No comments:

Post a Comment