Friday, February 1, 2013
பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வு
இன்றைய பண்பாட்டு நெருக்கடிகளும் சமூகமாற்றத்திற்கான வேலைமுறைகளும் என்ற தலைப்பில், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வை புதிய பண்பாட்டுக்கான வெகுஜன தளத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 11-02-2013(திங்கட்கிழமை) அன்று மாலை 3.00 மணிக்கு ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைப்பெறும். திரு. வ. செல்வராஜா தலைமையில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்வில் வரவேற்புரையை திரு. மு. இராமசந்திரன் வழங்குவார். சிறப்புரையை பேராசிரியர் அ. மார்க்ஸ் வழங்க கருத்துரைகளை கலாநிதி. ந. இரவீந்திரன், திருவாளர்கள். மோகன் சுப்பிரமணியம், எம். ஜெயகுமார், எஸ். தவச்செல்வன் ஆகியோர் வழங்குவர். நன்றியுரையை திரு. எம். எஸ். இங்கர்சால் வழங்குவார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment