Wednesday, September 1, 2010

முச்சந்தி வாசிப்பு

முச்சந்தி வாசிப்பு என்பது வேலைத் தளத்தில், குறிப்பாக சுருட்டு சுத்தும் தொழிலாளர்கள் தமது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போது ஒருவர் ஒரு கதையையோ செய்தியையோ வாசித்துக் காட்டுவர். ஏனையோர் அதனை செவிமடுத்தவாறே வேலையில் ஈடுபடுவர். ஏதாவது ஒரு இடத்தில் அல்லது அவர்களுக்கு முக்கிய பிரச்சனையாகத் தோன்றுமிடத்தில் நிறுத்தி, அது தொடர்பாக கலந்துரையாடுவர். இவ்வாறு நமது சூழலில் புழக்கத்தில் உள்ள வாசிப்பு முறைகளை நவீன சூழலுக்கு ஏற்றவாறாக மாற்றி அதனூடாக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்யலாம். அவ்வாறே வாசகர் வட்டங்களை உருவாக்கி அவரவர் தேவைக்கேற்றவகையில் இலக்கியங்கள் மற்றும் ஏனைய அறிவியல் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி அது தொடர்பான பரந்துபட்ட கருத்தாடல்களை மேற்கொள்ளலாம். இலக்கியத்தை மக்கள் மயப்படுத்துவது, மக்களை இலக்கிய மயப்படுத்துவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது இத்தகைய அனுபவங்களையும் கவனத்திலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment