எதிர் வரும் 11
மே மாதம் டிக்கோயா கிரைப் சேர்ஜ் மண்டபத்தில் அமரர்
சிவனு லட்சுமணனின் நினைவு தினத்தை முன்னிட்டு மலையக சமூக ஆய்வு மையத்தினர்
ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு ‘இன்றைய மலையக
அரசியல் குறித்த மீள்பார்வையும் எதிர்கால செயற்பாடுகளும்” என்ற தொணிப்பொருளில் நடைப்பெறவுள்ளது. அருட்தந்தை மா. சக்திவேல்
தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் “ மலையக தேசியம்- சவால்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் சிவம் பிரபாகரனும், “ மலையக சமூக மறுமலர்ச்சி தொடர்பில் செய்யக்
கூடியவைகளும்- செய்ய வேண்டியவைகளும்” என்ற தலைப்பில் திரு. எம். ஜெயகுமாரும் கட்டுரை
சமர்பிக்கவுள்ளனர். அவையினர் கருத்தாடலும் இடம்பெறும். மேலதிகமான தகவல்களுக்கு 071- 4903509 (சிவம் பிரபாகரன்) என்ற
இலக்கத்துடன் தொடர்புக் கொள்க.
No comments:
Post a Comment